சென்னை, ஜூலை 10– திராவிட மாடலுக்கு அடிப்படையாகத் திகழ்ந்த சாதனையாளர் பானகல் அரசர் பிறந்த நாளான நேற்று (9.7.2026), தி.மு.க. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பின்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
தி.மு.கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு வருமாறு:–
“தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்” எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பானகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
பானகல் அரசர் குறித்த புத்தகமே முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.
சமூகநீதியின் அடித்தள மான வகுப்புவாரி பிரதி நிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்கு ரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக்காலத்தில் அவர் செய்த சாதனைகள்தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை!
நம் கொள்கை முன்னோர் கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்!
இவ்வாறு தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
