பானகல் அரசின் முற்போக்குச் சீர்திருத்தங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதை– சமூக நீதிப் போராட்டங்களுக்கு அடித்தளமாக அமைந்தன! முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழ் வணக்கம்

0 Min Read

சென்னை, ஜூலை 10 நீதிக்கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகத் திகழ்ந்த பானகல் அரசர் அவர்கள், அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்தினார். அவரது முற்போக்கான சீர்திருத்தங்கள், பின்னாளில் தந்தை பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை மற்றும் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தன என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

கல்வி வளர்ச்சிக்கான அவரது அக்கறை, மக்கள் நலன் சார்ந்த நிர்வாகப் பார்வை ஆகியவை இன்றும் வழிகாட்டும் உயரிய மரபுகளாகத் திகழ்கின்றன. பானகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *