அரசு மருத்துவ சேவையில் புதிய முயற்சி: ‘நலம் AI’ செயலி பயன்பாட்டுக்கு வந்தது சுகாதாரத் தகவல்கள், சேவைகளை எளிதாக பெறலாம்

சென்னை, ஜூலை 9 பொதுமக்கள், சுகாதார தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் பெறுவதற்காகவும், டிஜிட்டல் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் “நலம்AI” எனும் உரையாடலுடன் கூடிய வாட்ஸ்ஆப் செயலி (Whatsapp Chatbot) நேற்று (8.7.2026) தொடங்கி வைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. பொதுமக்கள் 96192 22999 என்ற எண்ணை தங்களது Whatsapp தொடர்பு பட்டியலில் பதிவு செய்து Hi என்று செய்தி அனுப்புவதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இச்சேவையை அணுகி பயன்பெறலாம்.

இந்த உரையாடல் சேவை மூலம் பொதுமக்கள் தாங்களே பதிவு செய்து கொள்ளுதல், மருத்துவரின் பரிந்துரை சீட்டுகளை பார்வையிடுதல், ஆய்வகப் பரிசோ தனை அறிக்கைகளை தெரிந்து கொள்ளுதல் மற்றும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு  சேவைகளை எளிதாக பெறலாம்.

இச்சேவைகள் முதற்கட்டமாக 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு பின்னர் மீதமுள்ள 16 மாவட்டங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத் துறையில் “நலம்AI” மூலமாக வெளிநோயாளர் முன்பதிவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை ஒதுக்கியுள்ள நேர ஒதுக்கீடுகளின் அடிப்படையில் பொதுமக்கள் “நலம்AI” மூலம் தங்களது வருகையை முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளலாம். இந்த முயற்சி மருத்துவப் பயனாளிகளின் காத்திருப்பு நேரத்தை குறைத்து மருத்துவ சேவைகளை மேலும் எளிமையாகவும் விரைவாகவும் பெற வழிவகுக்கும். இத்திட்டம் படிப்படி யாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் அனைத்து துறைகளுக்கும், அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவ மனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

மேம்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் முதல்தளத்தில் அமைந்துள்ள வார்டு-111-ஆனது தமிழ்நாடு மருத்துவ சேவைகள் திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப் பீட்டு திட்ட நிதியில் ரூபாய் 63.48 லட்சம் மதிப்பில் மூன்றாம் நிலை அதிதீவிர மருத்துவ மற்றும் உயிர் காக்கும் சிகிச்சைப் பிரிவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவில் 20 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

My Hospital செயலி

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வரும் மருத்துவப் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறைப் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் முறையாக உள்ளதா என்பதை பொதுமக்கள் தகவல்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க ஏதுவாக My Hospital எனும் செயலி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறை பகுதிகளில் இந்த செயலியின் QR Code காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் QR Code-அய் ஸ்கேன் செய்து புகார்களையோ அல்லது தங்களுடைய கருத்துகளையோ தெரிவிக்கலாம். பராமரிப்பில் ஏதேனும் குறைபாடுகள் குறித்து மருத்துவப் பயனாளர் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு செயலியின் மூலமாக தகவல் தெரியவரும். இதனடிப்படையில் தொடர்புடைய இடத்தில் பராமரிப்புப் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *