தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தில் ‘விடியல்’ நீக்கம்

நாகர்கோவில், ஜூலை 9- தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தின் பெயரில் முக்கிய மாற்றத்தைச் செய்து த.வெ.க. அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ‘மகளிர் விடியல் பயணம்’ என்றிருந்த பெயரில் விடியல் நீக்கப்பட்டு தற்போது ‘மகளிர் பயணம்’ எனச் சுருக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரச் சுமையின்றி பயணம் செய்யும் வகையில் இலவசப் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்திற்கு ‘மகளிர் விடியல் பயணம்’ என்று பெயரிடப்பட்டு, பேருந்துகளின் முகப்பு மற்றும் பின்புறக் கண்ணாடிகளில், டிஸ்பிளே போர்டுகளில் அவ்வாறே காட்சிப்படுத்தப்பட்டது. பணிக்குச் செல்லும் பெண்கள், சிறு தொழில் புரியும் மகளிர் மற்றும் கல்லூரி மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டம், புதிய அரசின் கீழும் எவ்வித தடையுமின்றித் தொடர்கிறது. தற்போது தமிழ்நாட்டில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங் களின் பெயர்களை மாற்றம் செய்து வருகிறது.

அந்த வரிசையில் ‘விடியல்’ என்ற வார்த்தையை நீக்கி விட்டு, சுருக்கமாக ‘மகளிர் பயணம்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகத்தின் கீழ் இயங் கும் அனைத்து மண்டலப் பேருந்துகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

குமரி மாவட்டத்தில் செல்லும் நகரப் பேருந்துகள்  அனைத்திலும் பழைய ‘மகளிர் விடியல் பயணம்’ பதிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. அதற்குப் பதிலாக, ‘மகளிர் பயணம்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அனைத்துப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர்களுக்கும் தலைமை அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *