வெளிநாடு சென்று மருத்துவப் படிப்பு படித்தாலும் இந்தியாவில் பணிபுரிய விடமாட்டார்களோ! தகுதித் தேர்வுகள் என்ற பெயரில் கடிவாளம்!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 9- இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிக்கின்றனர்.

அங்கு பட்டம் பெற்ற பிறகு, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவராகப் பணிபுரிய வேண்டும் என்றால், ‘எஃப்.எம்.ஜி.இ’ எனப்படும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தகுதித் தேர்வை எழுத வேண்டும். தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்தும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியாவில் மருத்துவப் பயிற்சி மேற்கொள்வதற்கான உரிமம் வழங்கப்படும்.

இந்நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான எஃப்.எம்.ஜி.இ தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகளைத் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் 7.7.2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இத்தேர்வை நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 37,448 மருத்துவப் பட்டதாரிகள் எழுதியிருந்தனர்.

ஆனால், அவர்களில் வெறும் 4,635 பேர் மட்டுமே (12.38 சதவீதம்) தகுதி பெற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் நடந்த 6 தேர்வுகளில் இதுதான் மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் என்று வாரியம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *