ஹிட்லரின் ஆரிய மேலாண்மைக் கொள்கையை எதிர்த்து
இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளுக்குத்
ஏன் தந்தை பெரியார் ஆதரவு தந்தார்?
சென்னை, ஜூலை 8- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை” என்னும் தலைப்பில் ஆய்வுத் தொடர் பொழிவு ஆற்றி வருகிறார். புதுமை இலக்கியத் தென்றல், பெரியார் நூலக வாசகர் வட்டம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தத் தொடர் பொழிவை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நான்காவது தொடர் பொழிவை புதுமை இலக்கியத் தென்றலின் 1102ஆவது நிகழ்வில் ஆற்றினார்.
இந்த நிகழ்வு சென்னை பெரியார் திடலில் 6.7.2026 அன்று மாலை நடைபெற்றது. புதுமை இலக்கிய தென்றல் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் செ.தனராசு வரவேற்புரை ஆற்றினார். புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சேலம் பொதுக்குழு குறித்து எழுதிய அறிக்கையை வாசித்து விழாவை ஒருங்கிணைத்தார். பகுத்தறிவாளர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல் வன் தலைமை உரையாற்றினார்.
சிந்தனைகளின் கூர்மை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியார் சிந்தனை களின் கூர்மை, முன்னோக்குப் பார்வை, அஞ்சாமை போன்றவற்றை பல்வேறு ஆதாரங்களுடன் தம் ஆய்வுரையில் விளக்கினார்.
1927 ஆம் ஆண்டு திருநெல்வேலி யில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்ற ரசிகமணி டி.கே.சி அவர்கள் தந்தை பெரியார் பற்றி கூறிய கருத்துகளை எடுத்துக் காட்டி விளக்கினார்.
இரண்டாம் உலகப்போரில் தந்தை பெரியார் பிரிட்டிஷ் உள்ளிட்ட நேச நாடுகளை ஆதரித்தது குறித்து பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டார்.
ஹிட்லரின் ஆரிய இன மேலாண்மை கோட்பாடு உலகிற்கு மிகவும் ஆபத்தானது என்பதை உணர்த்தியவர் பெரியார் என்பதை விளக்கினார்
அடாஃப் ஹிட்லர் தாம் ஒரு ஜெர்மானியன் என்பதை விட ஆரிய இனத்தின் பெருமைமிக்க பிரதிநிதி என்பதையும் உலகின் நம்பர் ஒன் குடிமக்களாக ஆரியர்களை ஆக்குவதே தம் நோக்கம் என்பதையும் கூறியதை விளகினார். நாசிசத்தின் உயர்நிலை என்பது ஆரிய இனம் கலக்கின்ற பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே என்னும் ஹிட்லரின் போக்கை விளக்கினார்.
எனவே தான் தந்தை பெரியார் போரில் நேச நாடுகளை ஆதரித்ததுடன் தாம் நடத்திய விடுதலை பத்திரிக்கையை பிரிட்டிஷ் ஆட்சியர் கேட்டவுடன் அவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் யுத்த பிரச்சாரக் குழுவிற்கு இயக்கத்தின் தளபதியாக விளங்கிய பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் சொல்வதற்கும் அனுமதித்தார் என்பதை தமிழர் தலைவர் விரிவாக விளக்கினார்.
மேலும் வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் அவர்கள்அளித்த ஒரு பேட்டியில் இந்தியா சுதந் திரம் அடைந்தபோது மகிழ்ச்சி அடைந்தோம், அதன் பின்னால் இந்துத்துவா இருப்பதை அறிய முடியவில்லை என்று தெரிவித் ததை சுட்டிக்காட்டி, பெரியார் முன்னக்கோடு சுதந்திரம் அடைந் ததாக கூறப்படும் நிகழ்வை அதிகார மாற்றம் என்று விமர்சித்ததை எடுத்துக்காட்டினார்.
இறுதியாக பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் பொருளாளர் ஜனார்த்தனம் நன்றி உரையாற்றினார்.
பங்கேற்றோர்
இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன் செந்தில்குமாரி, திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் துரை. அருண், பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், தாம்பரம் மாவட்டத் தலைவர் இரா.முத்தையன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வட சென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், ஆவடி மாவட்டச் செயலாளர் க. இளவரசன், மாவட்டத் துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு மூதறிஞர் குழு செயலாளர் த.கு.திவாகரன், கவிஞர் முருகையன், புதுமை இலக்கிய தென்றல் அமைப்பின் பொருளாளர் மு. இரா. மாணிக்கம், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் பொருளாளர் தென்.மாறன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், அச்சக மேலாளர் க.சரவணன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் கருணாகரன், காப்பாளர் க.சமத்துவமணி, புதுமை இலக்கியத் தென்றல் துணைத் தலைவர் தங்க.தனலட்சுமி, உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
