நீதிமன்றத்தில் ஆஜராகாத அரசு வழக்குரைஞர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அபராதம் விதித்த நீதிபதி!

2 Min Read

கோவை, ஜூலை 8- அரசு வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சிரமமும், அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணையை நடத்த முடி யாததால் மாவட்ட ஆட்சியருக்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தர விட்டார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பான விசாரணை, அய்ந்தாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், சாட்சி சொல்வ தற்காக மருத்துவர் ஒருவர் கேரளாவில் இருந்து வந்து ஆஜராகி இருந்தார். ஆனால் கூடுதல் அரசு வழக்குரைஞர் விசாரணைக்கு ஆஜரா காததால் குற்றம் சாட்டப் பட்டவருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், அரசு தரப்பு சாட்சியிடம் விசாரணையும் நடத்த முடியவில்லை.

அரசு தரப்பின் தவறால் இது ஏற்பட்டதால் கோவை மாவட்ட ஆட்சியர் சார்பாக மாநில அரசு பத்தாயிரம் ரூபாய் தொகையினை ஒரு வாரத்திற்குள் நீதி மன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும், இந்தத் தொகை மருத்துவரின் வருகை செலவு மற்றும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என அய்ந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

இதேபோல அதே நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்கில், சாட்சி சொல் வதற்காக திருவாரூரில் இருந்து வந்த காவல் உதவி ஆய்வாளரும், குற்றம் சாட்டப்பட்ட அய்ந்து பேரும் ஆஜராகி இருந்தனர்.

ஆனால் கூடுதல் அரசு வழக்குரைஞர் ஆஜராகாததால் வழக்கு விசாரணை நடைபெற வில்லை.

இவர்கள்  நீதிமன் றத்திற்குத் தேவை யின்றி வரவழைக்கப் பட்டதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பின் தவறால் இது ஏற்பட்டதால், கோவை மாவட்ட ஆட்சியர் சார்பாக மாநில அரசு ரூ.9,000 தொகையை நீதிமன்றத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என நீதிபதி சிவக்குமார் உத்தர விட்டார்.

அதில் குற்றம் சாட்ட பட்ட 5 பேருக்கும் தலா ஆயிரம் ரூபாயும், காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.4,000  இழப்பீட்டுத் தொகையாக வழங்க நீதிபதி உத்திரவிட்டார்.

தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்குரைஞர்களுக்கான பணிக்காலம் கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், புதிய அரசு வழக்குரை ஞர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப் படாமல் உள்ளது.

இதனால் நீதிமன்றங் களில் புதிய அரசு வழக்குரைஞர்கள் பதவியேற்காமல் இருந்து வருகின்றனர்.

இதன் காரணமாக அரசு வழக் குரைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகா மல் உள்ள நிலையில், நீதிபதி ஆட்சி யருக்கு அபராதம் விதித்து இருப்பது குறிப்பிடத் தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *