பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் அவசியமான ‘டெட்’ தேர்வு கடினமாக இருந்தது! பட்டதாரி ஆசிரியர்கள் கருத்து!

2 Min Read

சென்னை, ஜூலை 6-  தமிழ்நாடு முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் 2ஆவது தாள் தேர்வு நேற்று  (5.7.2026) நடைபெற்றது. 1.61 லட்சம் பேர் பங்கேற்றனர் இந்த தேர்வுகடினமாக இருந்ததாக பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஒன்றிய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத் தின்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் முதல் தாளிலும், பட்டதாரி ஆசிரியர்கள் 2ஆவது தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

புதிதாக ஆசிரியர் பணியில் சேருபவர்கள் மட்டுமின்றி, ஏற்கெ னவே பணியில் உள்ளவர்களுக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2028-க்குள் தேர்ச்சி பெற வேண்டும் என காலக் கெடுவும் நிர்ணயித்துள்ளது. பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் முதல் தாள் தேர்வு நேற்று முன்தினம் (4.7.2026) நடத் தப்பட்டது. இத்தேர்வை 59 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு கடினமாக இருந்ததாக பெரும் பாலான ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் 2ஆவது தாள் தேர்வு நேற்று (5.7.2026) நடைபெற்றது. சென்னையில் 38 மய்யங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 603 மய்யங்களில் தேர்வு நடந்தது.

95.95 சதவீதம் பேர் வருகை: ‘2ஆவது தாள் தேர்வை எழுத 1.68 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 1.61 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். வருகைப்பதிவு 95.95 சதவீதம். அனைத்து மய்யங்களிலும் தேர்வு சுமூகமாக, வெளிப்படைத் தன்மையுடன் நடந்தது’ என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சிறப்பு டெட் 2ஆவது தாள் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கல்வி உளவியல் ஆகிய பகுதிகளில் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கூறினர். டெட் தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் 150-க்கு 90 மதிப்பெண்ணும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி, மாற்றுத் திறனாளிகள் 75 மதிப்பெண்ணும், எஸ்சி, எஸ்டி, எஸ்சி-அருந்ததியர் 60 மதிப்பெண்ணும் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *