ரூ.986 கோடியில் ஈரோடு – கரூர் இரட்டைப் பாதை திட்டப்பணிக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூலை 6- ஈரோடு – கரூர் இரட்டைப் பாதை திட்டப்பணிக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு – கரூர் இடையே இரட்டைப் பாதைப் பணிகளுக்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான, தொகை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யும்போது, படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த இரட்டைப் பாதை முடிந்து பயன்பாட்டிற்கு வரும்போது, ஈரோடு – கரூர் – திருச்சி தடத்தில் ரயில்களின் தாமதத்தை குறைக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கூறுகையில், “ஈரோடு – கரூர் இரட்டைப் பாதைத் திட்டம், இந்த பகுதியின் பயணிகளின் நீண்ட காலத் திட்டமாகும். இந்த திட்டப்பணி மேற்கொள்ள ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

இதன்வாயிலாக, ஈரோட்டில் இருந்து பல இடங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க முடியும். மேலும், கோவையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயிலை போடிநாயக்கனூர் வரை நீட்டித்து இயக்க வேண்டுமென தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த கோரிக்கையை நிறைவேற்றினால், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *