சேலம்: பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் பிரகடனம்!

7 Min Read

அறப்போராட்டத்திற்காகக் கேட்டது 1,000 இளைஞர்களை– கிடைத்தது 1,706 இளைஞர்கள்!

‘‘திராவிடம் ஒருபோதும் தோற்காது; திராவிடத்தை எதிர்த்தவர்கள் தான் காணாமல் போயிருக்கிறார்கள்!’’

சேலம், ஜூலை 5 சேலம் பொதுக்குழுவில் 19 தீர்மா னங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்களை விளக்கிப் பேசுகின்ற மாபெரும் பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அதில், ‘‘திராவிடம் ஒருபோதும் தோற்காது! வெற்றி தோல்விகள் வரும், போகும். திராவிடம் வெற்றி பெற்றே தீரும்’’ என்றும், ‘‘அதற்குச்  அத்தாட்சியாக அறப்போராட்டத்திற்கு ஆயிரம் இளைஞர்களைக் கேட்டோம். ஆனால், 1706 இளைஞர்களைக் கழகப் பொறுப்பாளர்கள் தந்திருக்கிறார்கள்’’ என்றும் பெரு மிதத்துடன் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

‘‘மந்திரமா? தந்திரமா?’’  நிகழ்ச்சி!

சேலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானம் – மாநகராட்சி அலுவலகம் அருகில், நேற்று (4.7.2026)  மாலை 5 மணிக்குத் தொடங்கியது. சுயமரியாதைச் சுடரொளிகள் ஆத்தூர் ஏ.வி.தங்கவேலு, மேட்டூர் கிருஷ்ணமூர்த்தி நினைவு அரங்கமாகவும், மண்ணச்சநல்லூர் பி.என்.ஆர்.அரங்கநாயகி, வில்லிவாக்கம் தங்கமணி குணசீலன் ஆகியோர் நினைவாக மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. திரைப்பட இயக்குநர் மாரி கருணாநிதி அவர்களின் வழிகாட்டலில் பறையிசை கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. முன்னதாக, திண்டுக்கல் ஈட்டி கணேசன்,  ‘‘மந்திரமா? தந்திரமா?’’ எனும் மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு பெறும் வகையில் செய்முறை விளக்க நிகழ்ச்சியை நகைச்சுவை கலந்து நடத்தினார். இறுதியில், தந்திரமே! என்று அதை நிறுவினார்.

நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் மூணாங்கரடு சரவணன் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். தொடர்ந்து கழக கிராமப்புற பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, மாநில மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கழகப் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, தி.மு.க.தோழர் சுபாஷ், சேலம் கிழக்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் சதாம் ஹுசைன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப குழு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே.தருண், திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர்

சேலம், ஜூலை 5 சேலம் பொதுக்குழுவில் 19 தீர்மா னங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்களை விளக்கிப் பேசுகின்ற மாபெரும் பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அதில், ‘‘திராவிடம் ஒருபோதும் தோற்காது! வெற்றி தோல்விகள் வரும், போகும். திராவிடம் வெற்றி பெற்றே தீரும்’’ என்றும், ‘‘அதற்குச்  அத்தாட்சியாக அறப்போராட்டத்திற்கு ஆயிரம் இளைஞர்களை கேட்டோம். ஆனால், 1706 இளைஞர்களை கழகப் பொறுப்பாளர்கள் தந்திருக்கிறார்கள்’’ என்றும் பெரு மிதத்துடன் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

‘‘மந்திரமா? தந்திரமா?’’  நிகழ்ச்சி!

சேலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானம் – மாநகராட்சி அலுவலகம் அருகில், நேற்று (4.7.2026)  மாலை 5 மணிக்குத் தொடங்கியது. சுயமரியாதைச் சுடரொளிகள் ஆத்தூர் ஏ.வி.தங்கவேலு, மேட்டூர் கிருஷ்ணமூர்த்தி நினைவு அரங்கமாகவும், மண்ணச்சநல்லூர் பி.என்.ஆர்.அரங்கநாயகி, வில்லிவாக்கம் தங்கமணி குணசீலன் ஆகியோர் நினைவாக மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. திரைப்பட இயக்குநர் மாரி கருணாநிதி அவர்களின் வழிகாட்டலில் பறையிசை கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. முன்னதாக, திண்டுக்கல் ஈட்டி கணேசன்,  ‘‘மந்திரமா? தந்திரமா?’’ எனும் மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு பெறும் வகையில் செய்முறை விளக்க நிகழ்ச்சியை நகைச்சுவை கலந்து நடத்தினார். இறுதியில், தந்திரமே! என்று அதை நிறுவினார்.

நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் மூணாங்கரடு சரவணன் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். தொடர்ந்து கழக கிராமப்புற பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, மாநில மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கழகப் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, தி.மு.க.தோழர் சுபாஷ், சேலம் கிழக்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் சதாம் ஹுசைன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப குழு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே.தருண், திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர்
துரை. சந்திரசேகரன், பொருளாளர் வீ.குமரேசன், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் – மேனாள் அமைச்சர் இரா.இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

ரூ.510 மதிப்புள்ள
ஏழு புத்தகங்கள், ரூ.400–க்கு!

கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், இளைஞரணி மாநிலச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.ந.பாலு, ஆத்தூர் மாவட்டத் தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். தொடர்ந்து, ‘தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேகதாது’, ‘நீட் தேர்வு ஒழிப்பு’, ‘வந்தே மாதரம் வாழ்த்துப்பாடலா? வசைப்பாடலா?’, ‘மண்டல் பரிந்துரை அமலானது எப்படி?’, ‘33% மகளிர் இட ஒதுக்கீடு’, உள்ளிட்ட 510/- ரூபாய் மதிப்புள்ள ஏழு புத்தகங்கள், ரூபாய் 400/- க்கு வெளியிடப்பட்டன. முதலில், பத்து புத்தகத் தொகுப்பை சேலம் தி.மு.க. மத்திய மாவட்டச் செயலாளர் மேனாள் அமைச்சர் இரா.ராஜேந்திரன், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஏழு புத்தகங்கள் அடங்கிய தொகுப்பை அனைத்துக் கட்சி தோழர்களும் வரிசையாக வந்து கழகத் தலைவரிடம் பெற்றுக் கொண்டனர். புத்தக வெளியீடு உள்ளிட்ட ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் அவர்கள் ஒருங்கிணைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் இயக்க வெளியீடுகளை அறிமுகம் செய்து உரையாற்றினார். மேடை ஒருங்கிணைப்பை மாநில ஒருங்கிணைப்பாளரான தஞ்சை இரா.ஜெயக்குமார் மேற்கொண்டார்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட நூல்களைத் தமிழர் தலைவரிடமிருந்து சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், மேனாள் அமைச்சருமான ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். மேனாள் அமைச்சர் ராஜேந்திரனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். உடன்: துரை. சந்திரசேகரன், ஊ. ஜெயராமன், சேலம் வீரமணி ராஜூ. (4.7.2026)

கழகத் தலைவருக்குச்
சிறப்பு!

முன்னதாக, இரவு 7.30 மணிக்கு கழகத் தலைவர் மாநாட்டுத் திடலுக்கு வருகை தந்தார். மாவட்டத்தின் சார்பிலும் இளைஞரணி சார்பிலும், அவருக்கு எழுச்சிகரமான கொள்கை ஒலி முழக்கங்களை முழங்கி, மாநாட்டுத் திடலை அதிரச் செய்யும்படியாக வரவேற்பு வழங்கிச் சிறப்பித்தனர். மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த மக்கள் திரளும் கழகத் தலைவர் மேடை ஏறும் போது அவருக்கு எழுந்து நின்று வணக்கம் செலுத்தி மகிழ்ந்தனர். தீர்மான விளக்க மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் சார்பில் கழகத் தலைவருக்கு மரியாதை செய்யப்பட்டது அதேபோல கழகத் தலைவர் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் மரியாதை செய்தார். இறுதியாக 8.35 மணிக்கு கழகத் தலைவர் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை!

அவர் தனது உரையில், ‘‘தேர்தல் தோல்வி வரும், போகும். கொள்கை தோல்விதான் ஆபத்தானது. திராவிடர் இயக்கம் கொள்கையில் என்றும் தோற்காது. அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் சேர்ந்து தான் இருப்போம். காரணம், இது தாய் வீடு. மனைவியைக் கூட மணவிலக்குச் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. தாயை அப்படிச் செய்ய முடியாது’’ என்று, தி.க., தி.மு.க. உறவுகளை ஒப்பிட்டு காட்டும்படியாகத் தொடங்கினார். தொடர்ந்து, 15.9.2006 அன்று, கலைஞர் ‘முரசொலி’ நாளேட்டில் எழுதியதை வாசித்துக் காட்டினார். அஃதாவது, ‘அரசியலுக்கு வந்த காரணத்தால் நாம் சமுதாயப்பணிகளை மறந்து விட வில்லை. ஏற்படுகின்ற திடீர் கட்சிகளைப் பாருங்கள், அவர்கள் அதிகாரத்துக்கு வந்துவிட்டால் சமுதாயப் பிரச்சினைகளைப்பற்றி பேசமாட்டார்கள். அந்த உணர்வு திராவிடர் கழகத்திற்கும் பிறகு தி.மு.க. வுக்கு மட்டும்தான் உண்டு’ என்று வாசித்ததும், மக்கள் தி.க., தி.மு.க.வின் கொள்கை உறவை எண்ணி கையொலி செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 ‘மானமிகு இல்லையேல்
மாண்புமிகுவுக்கு மதிப்பு இல்லை!’

அதை ஒட்டியே கழகத் தலைவர், ‘‘ஆகவே, திராவிடம் ஒருபோதும் தோற்காது. திராவிடத்தை எதிர்ப்பவர்கள் தான் காணாமல் போயிருக்கின்றனர். அதனால் தான் இதை பெரியார் மண்! என்று சொல்கிறோம்’’ என்று குறிப்பிட்டார். மக்கள் கையொலிகளை இன்னும் பலப்படுத்தி கழகத் தலைவரின் கருத்தை ஆதரித்தனர். தொடர்ந்து, அதே 15.9.2006 ‘முரசொலி’யில் கலைஞர் எழுதியிருந்த, ‘தொண்டு உள்ளத்தை தொலைக்காமல் இருப்பவன் நான்’ என்றும், ‘மானமிகு இல்லையேல் மாண்புமிகுவுக்கு மதிப்பு இல்லை’ என்றும் எழுதி இருந்ததையும், பலத்த கரவொலிகளுக்கிடையே பொருத்தமாகச் சுட்டிக்காட்டினார்.

திராவிடர் கழகம்

‘‘திராவிடர் கழகத்தின் தீர்மானங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல, வருங்காலத்தின்
சட்ட திட்டங்கள் என்பது வரலாறு!’

தொடர்ந்து பேசிய அவர், ‘‘திராவிடர் கழகத்தின் தீர்மானங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல, வருங்காலத்தின் சட்ட திட்டங்கள் என்பது வரலாறு’’ என்பதைச் சுட்டிக்காட்டி, ‘‘மாநில அரசு மட்டுமல்ல, அதைவிட ஆபத்தானவையாக, ஒன்றிய அரசும் மாநிலங்களவையில் பெரும்பான்மை பெறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதும், கட்சிகளை உடைப்பதுமாக 2016 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை செய்து கொண்டிருக்கும் ஜனநாயக விரோத காரியங்களைப்’’ பட்டியலிட்டார். இதிலிருந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்கத்தான், எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்கும் 1000 இளைஞர்கள் வேண்டும் என்று அறிவிப்பு செய்திருந்தேன் என்றும், காலையில் நடந்த பொதுக்குழுவில் இதுவரை 1,706 இளைஞர்களின் பட்டியல் தன்னிடம் தரப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, ‘‘திராவிடம் ஒருபோதும் தோற்காது. திராவிடத்தை எதிர்ப்பவர்கள் தான் காணாமல் போயிருக்கிறார்கள்’’ என்றும் குறிப்பிட்டு விட்டு, திராவிடர் கழகம் அடுத்தடுத்து அறிவித்துள்ள போராட்டங்களைப் பட்டியலிட்டார். தொடர்ந்து ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக சேலம் மாவட்ட துணைத் தலைவர் சு.இமயவரம்பன் நன்றி கூறி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சிக்குத் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளின் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் வந்திருந்து நிகழ்ச்சியை முழுவதுமாகக் கேட்டுப் பயன்பெற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *