அரசு என்று இருக்கும் பொழுது ஆளுநருக்கு என்ன வேலை? புகார் மனுக்களைப் பொதுமக்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பலாமாம்!

1 Min Read

சென்னை, ஜூலை 5 பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். அதை தமிழ்நாடு அரசிடம் தெரிவித்து நானும், அரசும் இணைந்து தீர்வு காண்போம் என்று ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பேச்சு

மகாராட்டிராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிகு ராம்ஜி இடாதே வாழ்க்கை வரலாறு குறித்த ‘சமரச யாத்ரீகர்’ எனும் புத்தக வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார். அவர் பேசியதாவது: உங்களிடம் இங்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கு வெட்கமாக இருக்கிறது. தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் நிலையில் தமிழை நான் தெரிந்துகொண்டு பேசவேண்டும். அடுத்த முறை தமிழில் பேச முயற்சிக்கிறேன்.

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு, மக்களுக்காக செயல்படுவதாக தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை லோக்பவனில் (ஆளுநர் மாளிகை) தெரிவிக்கலாம். அதை தமிழ்நாடு அரசிடம் தெரிவித்து, நானும், அரசும் இணைந்து தீர்வு காண்போம். தேவைப்பட்டால் பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு முதலமைச்சரிடமும் கூறுவேன்.

ஆளுநரிடமும், அரசிடமும் ஏதேனும் எதிர்பார்ப்பு இருந்தால் அதையும் தெரிவியுங்கள். நாம் ஒன்றிணைந்து மக்களுக்காக செயல்படுவோம். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனதுதான் மிகப்பெரிய பிரச்சினை. அதை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

கடந்த 2-ஆம் தேதி மதுரையில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் அர்லேகர், ‘‘வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’’ என்று தெரிவித்தார். அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டமும் நடத்தினார். அவர் அரசியலமைப்புச் சட்ட வரைமுறைகளை மீறி, ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக அமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் விமர்சனங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *