தானியங்கி பட்டா மாறுதலில் புதிய நடைமுறை! அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 5- தானியங்கி பட்டா மாறுதலை எளிமைப் படுத்தும் விதமான புதிய நடைமுறைகள் 15 நாட்களில் அமலாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை:

பட்டாவை விரைந்து வழங்கும் வகையில், உட்பிரிவு இல்லாத சொத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் முடி வுற்றதும், விற்பனை செய்பவரின் பெயர், புல எண் மற்றும் பரப்பளவு ஆகியவை இணையதள பட்டாவில் உள்ள பெயர் மற்றும் இதர விவரங்களுடன் ஒன்றாக இருந்து, வில்லங்கங்கள் ஏதும் அந்தச் சொத்தின் மீது இல்லாதிருப்பின் அதை வாங்குபவரின் பெயருக்கு தானியங்கி முறையில் இணையவழியில் பட்டா மாறுதல் செய்துதரப் படுகிறது.

தற்போது அமல் படுத்தப்பட்டு வரும் இந்த நடைமுறையில் சில குறைபாடுகளைக் களைந்து, உட்பிரிவு இல்லாத சொத்தை வாங்கியவரின் பெயருக்கு தானியங்கி பட்டா மாறுதல் சேவையை எளி மைப்படுத்துவதற்காக சில திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன.

அதன்படி இனி நிலத்தை விற்கும்போது நில உரிமையாளர் (பட்டாதாரர்) மற்றும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் கையொப்பமிடும் நிகழ்வுகளிலும் இனி இந்தச் சேவையை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.

அதேபோல், ஒரு பட்டாதாரர் நிலத்தை பொது அதிகார முகவர் (Power of Attorney) மூலமாக பதிவு செய்யும் போது, விற்பனை செய்ப வரின் பெயருக்கும். பட்டாதாரரின் பெயருக்கும் பொருத்தம் இல்லாமல் இருந்தாலும், செல்லத்தக்க பொது அதிகார முகவர் (valid Power of Attorney) என்பதன் அடிப்படையில் தற்போது இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், நிலத்தை வாங்குபவருக்கு அதே வருவாய் கிரா மத்தில் ஏதேனும் நிலம் இருந்தாலும், இல்லா விட்டாலும் அவருக்கு தானாகவே கடைசி பட்டா எண்ணுக்கு அடுத்த பட்டா எண் ஒதுக் கப்படும். இதன் மூலம் காலவிரயம் குறையும்.

இந்த புதிய நடைமுறை தானியங்கி பட்டா மாறுதல் சாஃப்ட்வேரில் திருத்தங்கள் செய்து 15 நாட்களுக்குள் அமல்படுத்தப்படும்.

இதன்மூலம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் உட்பிரிவு அல்லாத இனங்களில் தானியங்கி முறையில் பெருவாரியான பட்டாக்கள் மாறுதல் செய்யப்படும்.

இதனால் பொதுமக்கள் நிலத்தை பதிவுசெய்த பிறகு பட்டா மாறுதல் தொடர்பாக சார்-பதிவாளர் அல்லது வட்டாட்சியர் அலுவல கத்துக்கோ நேரில் செல்லும் நிலை தவிர்க்கப் படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *