சகோதரனைத் தாக்கிய வழக்கு: நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை 10ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராக உத்தரவு!

2 Min Read

புதுச்சேரி, ஜூலை5- தமிழ்நாடு நிதி அமைச்சரும், தவெக பிரமுகருமான மரிய வில்சன், தொழில் மற்றும் குடும்ப அறக்கட்டளை போட்டி காரணமாக கடந்த 2022 ஆகஸ்ட் 8 அன்று புதுச்சேரி எழில் நகரில் உள்ள தனது தம்பி மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கேரலின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.

உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக்கொள்ள அமைச்சர் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி யிருக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் கடுமையான கண்டனம்

புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சேரலாதன் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (4.7.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரைக் காரணம் காட்டி அமைச்சர் தரப் பில் மீண்டும் அவகாசம் கோரப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி கடுமையாக விமர் சித்தார்:

“ஏற்கனவே கூட் டத் தொடரைக் காரணம் காட்டி 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் சட்டப்பேரவை 3 நாட்கள் மட்டுமே நடைபெற்றது என்பதை தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன். அரசுப் பணி பாதிக்கப் படக் கூடாது என்பதற் காகவே விடுமுறை நாளான சனிக்கிழமை ஆஜராக உத்தரவிட்டும், மீண்டும் ஜூலை 22 வரை அவகாசம் கேட்பதா?” என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், காணொலி மூலம் ஆஜராக அமைச்சர் தரப்பு வழக்குரைஞர் விடுத்த கோரிக்கையையும் நிராகரித்த நீதிபதி, “குற்றப்பத்திரிகையை நேரில் வந்து பெற்றுக் கொள்வதே சட்ட நடை முறை” என்று கூறி, வரும் ஜூலை 10ஆம் தேதி அமைச்சர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என அதிரடியாக உத்தர விட்டார்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரின் சகோதரர் மரிய கிளோத் பல்வேறு திடுக்கிடும் புகார் களைத் தெரிவித்தார்:

முறைகேடுக்கு எதிர்ப்பு:

குடும்ப அறக்கட்டளை யின் நிர்வாக முறைகேடு கள் குறித்து கேள்வி எழுப் பியதாலேயே தம்மீதும், தன் மனைவி மீதும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

வெளிநாட்டில் தஞ்சம்:

உயிருக்கு பயந்து தாமும், தனது மனைவியும் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

கட்சியினர் மிரட்டல்:

வழக்கை வாபஸ் பெறக் கோரி தவெக வினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து மிரட்டி வருகின்றனர்.இருப்பினும், நீதித்துறையை முழுமையாக நம்புவதாக வும், தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை சட்டப் போராட்டத்தைத் தொடரப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *