திருச்சி, ஜூலை 3 மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் கட்ட ணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருச்சியில் அண்மையில் நடைபெற்ற தட்சிண ரயில்வே ஓய்வூதியர் சங்க பொது மகா சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் பொன்மலை கிளையின் 2-ஆவது ஆண்டு பொது மகாசபை கூட்டம், பொன்மலை ஆர்மரிகேட் பகு தியில் உள்ள டிஆர்இயு அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்க மாக, பொன்மலை தியாகி களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிநடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பொது மகா சபை கூட்டத்துக்கு கிளையின் தலைவர் என். ராஜகோபால் தலைமை வகித் தார். கூட்டத்தில் கிளையின் வேலை அறிக்கையை யும், வரவு-செலவு கணக்கு அறிக்கையையும் கிளையின் பொருளாளர்தயாநிதி சமர்ப்பித்தார்.
நிர்வாகிகள் கணேசன், பி. மகேந்திரன், தர்மராஜ், சி. மனோகரன், சம்பத், ராமநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து, டிஆர்இயு கோட்டத் தலைவர் கே.லெனின்,கோட்ட செய லாளர் கரிகாலன் ஆகியோர் வாழ்த்துரைவழங்கினர். தட்சிண ரயில்வே பென்சனர் சங்கத்தின் மண்டல தலைவர் ஆர். இளங்கோ வன், பொதுச் செயலாளர் ஏ.முருகேசன், சிய்டியு மாநகர் மாவட் டச் செயலர் ரங்கராஜன் சிறப்புரை யாற்றினர்.
6 மாதங்களுக்கு ஒருமுறை குறைதீர் கூட்டம்: கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள்: 8ஆவது சம்பள கமிசன் அறிக்கையில்,பென்சன் ஒழுங்காற்றுசட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். மூத்த குடிமக் களுக்கு கரோனா காலத்தில் நிறுத்தப் பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். ஓய் வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டத்தை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் கூட்ட வேண்டும்.ஓய்வூதியர் களுக்கு தற்போது நடைமுறை யில் உள்ள இ-பாஸ் முறையை ரத்து செய்துவிட்டு, பழையபடி பேப்பர் பாஸ் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிறைவாக வெங்கடேசன் நன்றி கூறினார்.
