ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்த அமெரிக்க ஆடம்பரக் கப்பலில் பரவிய “நோரோ வைரஸ்” வாந்தி, வயிற்றுப் போக்கினால் 125 பேர் பாதிப்பு

புளோரிடா ஜூலை 3- அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து கரீபியன் தீவுகளை நோக்கி “ரூபி பிரின்சஸ்” என்ற மிகப்பெரிய ஆடம்பரக் கப்பல் ஒன்று ஆயிரக்கணக்கான பயணியருடன் கடந்த மே மாதம் உற்சாகமாக புறப்பட்டது. பயணம் பாதியைக் கடந்த நிலையில், திடீரென சிலருக்கு கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

முதலில் உணவு நச்சுத்தன்மை என்று கருதப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. கப்பல் ஊழியர்களில் சிலரும் இதில் பாதிக் கப்பட்டனர்.

கப்பலில் இருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக பரிசோதனை செய்ததில், இது மிக மோசமாக பரவக்கூடிய ‘நோரோ வைரஸ்’ தொற்று என்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனை வருக்கும் கப்பலில் உள்ள தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் அலாஸ்கா மற்றும் கனடாவுக்கு சென்ற போது கப்பலில் திடீரென பரவிய “நோரோவைரஸ்” தொற்று 20 நாள் பயணத்தில் 102 பயணிகள் மற்றும் 23 பணியாளர்கள் என மொத்தம் 125 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சான் பிரான்சிஸ் கோவில் கப்பல் தனி மைப்படுத்தப்பட்டு கிருமி நீக்கம் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *