ஜூலை 5ஆம் தேதி மு.க.ஸ்டாலின் லண்டன் செல்கிறார்

சென்னை, ஜூலை 2– தி.மு.க. தலைவரும், மேனாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஜூலை 5ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள புகழ் பெற்ற கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர் படிப்பை மேற்கொண்டு வந்தார்.

தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில், இன்பநிதி படித்த மான்செஸ்டர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஜூலை மாதம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் நேரில் பங்கேற்று வாழ்த்துவதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பேரன் இன்பநிதி ஆகியோர் ஜூலை 5ஆம் தேதி சென்னையில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டு செல்கின்றனர்.

பேரனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு, மு.க.ஸ்டாலின், லண்டனிலேயே 10 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு ஜூலை பிற்பகுதியில் அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

முதல் அச்சுப் புத்தகம்..
1,100 ஆண்டுகள் பழைமை!

உலகில் தேதி குறிப்பிடப்பட்டு அச்சிடப்பட்ட முதல் புத்தகம் Diamond Sutra. மகாயான பவுத்த நூலான இது கி.பி. 868 மே 11 அன்று வாங் ஜியே என்பவரால் மர அச்சு (Woodblock Printing) முறையில் தயாரிக்கப்பட்டது. சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நூல், சீனாவின் மோகாவோ குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *