கடலூர், ஜூலை 2– என்.எல்.சி. பங்குகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் போக்கைக் கண்டித்து 7.7.2026 அன்று காலை 10 மணிக்கு நெய்வேலி மெயின் பஜார், காமராஜர் சிலை அருகில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் உள்ள கீழ்க்கண்டஊர்களில் தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள் 6.7.2026 அன்று காலை முதல் இரவு வரை நடைபெறும். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.இளமாறன், கடலூர் எழில் ஏந்தி சிறப்புரை ஆற்றுவர்.
பிரச்சாரம் நடைபெறும் ஊர்கள்: நெய்வேலி நகரம், மந்தாரக்குப்பம், பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம், வீணங்கேணி, வடலூர், மருவாய், சேராகுப்பம், ஆபத்தாரணபுரம், குறிஞ்சிப்பாடி, கன்னித்தமிழ்நாடு, மீனாட்சிபேட்டை, வெங்கடாம்பேட்டை சத்திரம்-குறுக்கு சாலை, மதனகோபாலபுரம், அப்பியம்பேட்டை, கட்டியங்குப்பம், வேகாகொல்லை, கொள்ளுகாரன்குட்டை, மருங்கூர், மானடிக்குப்பம், பேர் பெரியாங்குப்பம், முத்தாண்டிகுப்பம், சின்ன காப்பாங்குளம், பெரிய காப்பாங்குளம், இந்திரா நகர் வடக்குத்து, வடக்கு மேலூர், சந்தவெளிப்பேட்டை, கண்ணுத்தோப்பு, கீழ கொல்லை, பெருமத்தூர், அண்ணா கிராமம், நெய்வேலி ஆர்ச் கேட்.
பிரச்சார ஏற்பாடு: திராவிடர் கழகம் கடலூர் மாவட்டம்.
