உள்ளாட்சி நியமன உறுப்பினர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்திப்பு தி.மு.க. மாற்றுத்திறனாளிகள் அணியினரும் சந்தித்தனர்

1 Min Read

சென்னை, ஜூலை 1 தமிழ் நாடு உள்ளாட்சி நியமன உறுப் பினர்கள் நலச் சங்க நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித் தனர். இதேபோல திமுக மாற்றுத் திறனாளிகள் அணியினரும் சந்தித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, மாற்றுத்திறனாளிகளை சிறப்பிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர் களாக நியமித்து உத்தர விட்டார்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ளாட்சி மன்றங்களில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கொண்ட “தமிழ்நாடு உள்ளாட்சி மன்ற உறுப்பினர் நலச் சங்க”த்தின் மாநில நிர்வாகிகளான கோவை மாநகராட்சி மன்ற நியமன உறுப்பினரான சா.குமார ராஜபாண்டியன், சென்னை மாநகராட்சி மன்ற நியமன உறுப்பினரான பி.ஜான்சி உமா, கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற நியமன உறுப்பினரான ஆர்.எம்.சாகுல், செங்கல்பட்டு நியமன உறுப்பினரான எம்.சிவலிங்கம், காட்பாடி நகராட்சி மன்ற நியமன உறுப்பினரான ரங்கசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உள்ளாட்சி மன்ற நியமன உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அத்துடன், திமுக மாற்றுத் திறனாளிகள் அணி மாநில செய லாளர் டி.எம்.என்.தீபக், மாநில தலைவர் ரெ.தங்கம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் சந்தித்தனர். அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *