27-06-1943 அன்று 10 வயது சிறுவனாக மேடையில் பேசிய நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு குற்றாலப் பயிற்சி முகாமில் பாராட்டு

1 Min Read

27-06-1943  அன்று கடலூர் திருப்பாதிரிபுலியூரில் தந்தை பெரியார் பங்கேற்ற பொதுக்கூட்ட  மேடையில் முதல் முதலில் 10 வயது சிறுவனாக மேடையில் பேசிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  இன்று 93 வயதில் 47 ஆம் ஆண்டு குற்றாலத்தில் நடைபெறும் பயிற்சிப் பட்டறை வகுப்பெடுக்க வருகை  திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட காப்பாளர் பால்ராசேந்திரம், தென்காசி மாவட்ட காப்பாளர் டேவிட்செல்லத்துரை, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் கே.டி.சி.குருசாமி ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பயிற்சி மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடன் கழகத் துணைப் பொதுச் செயலாளர்
ச. பிரின்சுஎன்னாரெசுபெரியார் எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா. நேரு.

திராவிடர் கழகம்

ன்னாளப்பட்டி திறந்தவெளி மாநாட்டில் ஆசிரியர் உரை கேட்கக் கூடியிருந்தோர்

திராவிடர் கழகம்

ஜூலை 4 ஆம் தேதி சேலத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக் குழு அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் சேலம் மாவட்ட காப்பாளரும், பெரியார் பெருந்தொண்டருமான ஜவகர், கழக ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜ் ஆகியோர் வழங்கினர். உடன்: திண்டுக்கல் வீரபாண்டியன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *