தஞ்சாவூர், ஜூன் 25– வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் Periyar Foundation for Pre-incubation சார்பில் “Founder Talk” என்ற தலைப்பில் தொழில் முனைவோர் சிறப்பு உரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
இக்கல்லூரியில் அமைந்துள்ள வளாகத்தில் காலை 11.00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்விற்கு புதுக் கோட்டையைச் சேர்ந்த Mudfield Farms Pvt. Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சபரிநிவாஸ் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழில் தொடங்குவதில் உள்ள சவால்கள், வாய்புகள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
நிகழ்விற்கு Periyar Foundation for Pre-incubation சார்பில் Pre-incubation மேலாளர் பிரவீன் ராஜ் ஜெ வரவேற்புரை ஆற்றினார். Pre-incubation தலைமை செயல் அலுவலர் முனைவர் க.ரோஜா நிகழ்வின் நோக்கம் மற்றும் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
நிறைவாக Periyar Foundation for Pre-incubation சார்பில் Pre-incubation இணை அலுவலர் கே.கோபி நன்றியுரை ஆற்றினார். தொழில் முனைவில் ஆர்வமுள்ள 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
