இந்நாள் – அந்நாள்

ஜாதி ஒழிப்புப் போராளி
 இடையாற்றுமங்கலம் தெய்வானை அம்மாள் 
நினைவு நாள் இன்று – 24.06.1958

ஜாதி ஒழிப்பு வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் பதிவு செய்த நாள் நவம்பர் 27, 1957. தந்தை பெரியார் அவர்களின் ஆணையை ஏற்று – 10,000 கருஞ்சட்டைத் தோழர்கள், ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவை தீயிட்டுக் கொளுத்தினர்; 300 பேர் கைது செய்யப்பட்டு சிறையேகினர். பிணை கேட்டு அவர்கள் வெளியே வரவில்லை. 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஏற்றனர்.

சிறைப்பட்ட ஒருவர்கூட அரசியல் கைதியைப் போல் நடத்தப்படவில்லை. கீழான சமூகக் குற்றங்களைச் செய்த கைதிகளைப் போலவே அரைக்கால் டிரவுசர் அரைக்கைச் சட்டை, சட்டையில் வில்லை என்ற முறையில் அவமானப்படுத்தப்பட்டனர். மற்ற கிரிமினல் கைதிகளைப் போலவே தோட்ட வேலை, சமையற்கட்டு, சமையல் பாத்திரங்கள் கழுவுதல் போன்ற பணிகளில் அமர்த்தப்பட்டனர். சிறையின் உணவும், தட்பவெப்ப நிலையும், போதிய தண்ணீர் வசதி இல்லாமையினாலும், அலட்சியமான மருத்துவ கவனிப்பினாலும் பலர் நோய்வாய்ப்பட்டனர்.

அவ்வாறு சிறையில் துன்பப்பட்டவர்களில், ஜாதி ஒழிப்புப் போராளி இடையாற்று மங்கலம் தெய்வானை அம்மாள் அவர்களும் முக்கியமானவர் ஆவார். இன்று அவரின் மறைவு நாள் (24.6.1958) ஆகும்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *