இரக்கமில்லா ஒன்றிய அரசு ‘நீட்’ தேர்வு அச்சத்தில் ஓசூர் மாணவர் தற்கொலை

1 Min Read

தருமபுரி, ஜூன் 22- மதியம் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வு எழுத அச்சம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

‘நீட்’ தேர்வு

2026-2027-ஆம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் ஜூன் 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஆனால், நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக அந்த தேர்வு ரத்துசெய்யப்பட்ட நிலையில்,ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மாணவர் தற்கொலை

இதற்கிடையே, நீட் தேர்வு எழுத அச்சம் காரணமாக தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பல நகரங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வு எழுத அச்சம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஏற்கெனவே 3 முறை தேர்வு எழுதி தோல்வியடைந்த வெற்றியானந்தம், 4-ஆவது முறையாக நேற்று தேர்வு எழுத இருந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மதியம் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *