தஞ்சை, ஜூன் 21- மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 103ஆவது பிறந்தநாள் விழா, பொதுநலத்தொண்டர் தஞ்சை ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் 19ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் 13.6.2026 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை கலெக்டர் முருகராஜ் நகர் பெரியார் படிப்பகம் எதிரில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது
இசை நிகழ்ச்சி
மாநிலக் கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்னரசு, உறந்தை கோபு, திரைப்பட இயக்குநர் மணிவாசகம் குழுவினரின் பரவட்டும் திராவிடத்தீ என்ற தலைப்பில் இன எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது
படிப்பக துணைச்செயலாளர் மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவர் வழக்குரைஞர் இரா.சரவண குமார் நிகழ்விற்கு தலைமையேற்று உரை யாற்றினார்
படிப்பக உறுப்பினர் யோவான் குமார் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்
படிப்பக நுழைவாயிலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த மருத்துவர் நா.எழிலன் மாலை அணிவித்து முழக்க மிட்டார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவருடைய படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் மாலை அணிவித்தார். பொதுநலத் தொண்டர் பூபதி படத்திற்கு திமுக மாநகரச் செயலாளர் சண்.இராமநாதன் மாலை அணிவித்து சிறப்பித்தார்

மாவட்டச் செயலாளர் அருணகிரி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், படிப்பக புரவலர் ரூபாவதி பூபதி, படிப்பக புரவலர் தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர செயலாளர் படிப்பக தலைவர் இரா.வீரக்குமார், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன், தஞ்சை தெற்கு ஒன்றியத் தலைவர் இரா.சேகர், படிப்பகத் துணைச் செயலாளர் குழந்தை.கவுதமன், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், புதிய பேருந்து நிலையப் பகுதித் தலைவர் சாமி.கலைச்செல்வன், புதிய பேருந்து நிலையப் பகுதிச் செயலாளர் வெ.துரை, விடுதலை வாசகர் வட்ட துணைத் தலைவர் விஸ்வநாதன், விடுதலை வாசர் வட்ட செயற்குழு உறுப்பினர் குழந்தைசாமி படிப்பக உறுப்பினர் வசந்தன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்
திமுக மருத்துவரணி மாநில துணைச் செயலாளர் தஞ்சை துணை மேயர். மருத்துவர் அஞ்சுகம்பூபதி, தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்
மருத்துவர் நா.எழிலன் சிறப்புரை
திமுக மாநில மருத்துவரணி செய லாளர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் சிறப்புரையாற்றினார்.
திராவிடர் கழக வெளியிடான “நமது குறிக்கோள்” என்ற புத்தகத்திலிருந்து தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி அதன் செயலாகத்தை முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் நிறைவேறியதை எடுத்துக் கூறி இன்றைய இளைஞர்கள் மாணவர்களுக்கு அவர்கள் மொழியில் திராவிட இயக்கத்தின் சாதனைகளை எடுத்து விளக்க வேண்டியது கட்டாயத் தில் நாம் இருக்கிறோம் நமது குழந்தைகள் மாணவர்களை பகுத்தறிவு உள்ளவர்களாக உருவாக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு சிந்திக்கும் திறன் வரும். சிறந்த முடிவுகளை எடுக்கிற ஆற்றல் வரும். நான் உணர்வு இரண்டு பிள்ளைகளையும் சிறந்த பகுத்தறிவாளர்களாக உருவாக்கி உள்ளேன். அந்த வகையில் எனக்கு மன நிம்மதி திராவிட இயக்கத்தில் உள்ள அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் என்று தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்
திமுக தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், து.செல்வம், திமுக தஞ்சை மாநகர செயலாளர் சண். இராமநாதன், திமுக செய்தி தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
படிப்பகச் செயலாளர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஏ.வி. என் குணசேகரன் நன்றியுரை ஆற்றினார்
திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி. வில்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் முனைவர் ந.எழிலரசன் , கழக சொற்பொழிவாளர்கள் இரா. பெரியார்செல்வன், செல்லத்தூர் சிற்றரசு பெரியார் சமூக காப்பு அணி இயக்குனர் தே.பொய்யாமொழி பகுத்தறிவாளர்கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, பெரியார் வீர விளையாட்டு கழகம் மாவட்டச் செயலாளர் சிகாமணி மாவட்ட மகளிர் அணித் தலைவர் கலைச்செல்வி, ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன், திருவையாறு ஒன்றியச் செயலாளர் துரை ஸ்டாலின், நாடக வேள் மா.வீ.முத்து, திமுக வல்லம் பேரூர் கழகச் செயலாளர் கல்யாணசுந்தரம், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மு.க.கார்த்தி, தஞ்சை மாநகர கீழவாசல் பகுதி செயலாளர் ஆர். கே.நீலகண்டன், மாநகர திமுக பொருளாளர் காளையார் சரவணன், வல்லம் சிங் இரா.அன்பழகன், பூபதி ந. சக்திவேல் பூபதி ந.குணசேகரன் பூபதி ந.மனோகரன், திமுக ஒன்றிய கவுன்சிலர் கல்பனா, வீ.மகிழ்நன். அ.வெ.காவியா, அ.வெ.கருணாநிதி, தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வன், அத்திவெட்டி வீரவேல், மாதாக்கோட்டை பெஞ்சமின் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
