தருமபுரி, ஜூன் 19- தமிழர் தலைவர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முழுவதும் முத்தமிழர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தருமபுரி கழக மாவட்டத்தின் சார்பாக தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பாக 10.6.2026 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத் திற்கு மாவட்ட தலைவர் பீம.தமிழ் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் மா.முனியப்பன் வரவேற்புரை ஆற்றினார்.
சீரிய பெரியார் சிந்தனையாளரும் திராவிடர் கழகத்திற்கு எல்லா நிலைக ளிலும் உதவக்கூடிய சகோதரர் நாட்டாண் மாது தொடக்க உரையை நிகழ்த் தினார்.
அவர் தன்னுடைய தொடக்க உரையில் தான் சிறுவயதாக இருந்த காலத்திலிருந்து பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அதன் பிறகு அரசியலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டவன் என்ற சிறப்பையும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சாதனைகளையும் எடுத்து ரைத்தார்.
மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர் தன்னுடைய உரையில், நீட் நுழைவுத் தேர்வு என்பது மாநில அளவில் இருக்கின்ற பொழுது, அதனை சரியான முறையில், சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறை வேற்றி நீட் தேர்வை ஒழித்தவர். அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற நிலையிலும் அதில் வெற்றி பெற்றவர் கலைஞர். அதேபோல அகில இந்திய நீட் நுழைவுத் தேர்வு என்பது தேசிய அளவில் எல்லா மாநிலங்களில் இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு விலக்கு வாங்கிய பெருமை உடையவர் கலைஞர் என்ற செய்தியை தன்னுடைய உரையில் தெரிவித்தார்கள்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் கூட்டத்தின் இணைப் புரை நிகழ்த்தினார்.
தோழர்கள் மாரி கருணாநிதி, அரூர் சா.ராஜேந்திரன், கவிஞர் கீரை.பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் சிறப்பான ஒரு பொதுக்கூட்ட உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றியும், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும், புரட்சியாளர் பாபாசாகேப் பற்றியும், எழுதிய கவிதைகளை எடுத்துச் சொல்லி உரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழக முக்கிய பொறுப்பாளர்கள் முல்லை வேந்தன், கவுன்சிலர் சுருளி ராஜா, மாதேஷ், மு சக்கரை, அன்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் ஷாஜகான் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகத் தோழர்கள் அ.தமிழ்ச்செல்வன், க.கதிர், இளைய மாதன், மா.சுந்தரம், கரு.பாலன், இரா.பழனி, மா.சென்டராயன், காமலாபுரம் தோழர்கள் கு.சரவணன், மாணிக்கம், சின்னசாமி, ராமசாமி, ராஜா மற்றும் ஊமை.காந்தி, ஊமை மு.கணேசன், ஊமை அ.பிரபாகரன், மற்றும் பகுத்தறி வாளர் கழக தோழர்கள் கதிர் செந்தில், அன்பரசு, உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
கூட்டத்தில் சின்னபாப்பா சக்கரை, சின்ன பாப்பா காந்தி, சகுந்தலா அர்ஜுனன், முனியம்மாள் முருகன், மகேஸ்வரி கணேசன், மாதம்மாள், வழக்குரைஞர் கவுதம சங்கமித்திரை, தர்மபுரி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் பெ.கோகிலா உள்ளிட்ட மகளிர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக எம்ஆர்.ஆர்.சி. பொறுப் பாளர் அ.பிரபாகரன் நன்றி தெரிவித்தார்.
