கிண்டி பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும் – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசு, தமிழ்நாடு

சென்னை, மார்ச் 21- சென்னை கிண்டியில் கலைஞர் நினைவு பன் னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும் என்று நிதிநிலை அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு பணிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த அரசின் முன்னோடித் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத் தில், தொற்றாநோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, குணப் படுத்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச் சிக்கு அடித்தளமாக விளங்கும் தொழி லாளர்களின் நலனில் தனி அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, தொழிற் சாலைகளிலும், கட்டுமானம் உள் ளிட்ட அமைப்புசாரா தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படு வதைத் தடுக்க ஒரு சிறப்பு முயற்சியைத் தொடங்கவுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளிலுள்ள 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டத்தில் புலம் பெயர் தொழிலாளர்களும் பயனடை வார்கள்.

முதலமைச்சரின் விரிவான மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தில், குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 11.82 லட்சம் நோயாளிகளுக்கு ரூ.993 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை

கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 1,000 படுக்கை வசதி கொண்ட ‘கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை’ இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும். ரூ.1,020 கோடி செலவில் மதுரை, கோயம் புத்தூர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களி லுள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்டு வரும் புதிய உயர்மருத்துவக் கட்டடங் களும் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் உயர்மருத்துவ சிகிச் சைத் தேவைகளை நிறைவு செய்து வரும் மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில் ரூ.110 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். வடசென்னை பகுதி மக்களின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவும், செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் விடுதிக்கு புதிய கட்டடங்களும் ரூ.147 கோடி செலவில் கட்டப்படும்.

மாநிலத்தின் முதல் அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட் டையில் 1964ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது. இக்கல்லூரியில் தற்போது 100 இளங்கலை பட்டதாரிகளும், 60 முது கலை பட்டதாரிகளும் படித்து வருகின் றனர்.

நாள்தோறும் ஏறத்தாழ 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் ரூ.40 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *