குத்தாலம் – மயிலாடுதுறை, செம்பனார்கோவில், கொள்ளிடம்
ஒன்றியக் கழக தோழர்கள் கவனத்திற்கு…
நமது கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், கழகத் தோழர்களுக்கு எழுதியுள்ள மிக முக்கியமான அறிக்கையின்படி, மாவட்டம் தோறும் குறைந்தது 20 அறப்போராட்டக் களவீரர்களாக இளைஞர்களின் பட்டியலை ஜூலை 4 சேலத்தில் நடைபெறும் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கிட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள், இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள் அணியின் பொறுப்பாளர்கள் இணைந்து மாவட்ட அறப்போராட்ட இளைஞர்கள் பட்டியல் நகலை ஜூன் 30க்குள் தலைமைக் கழகத்திற்கும் மாநில ஒருங்கிணைப்பாளருக்கும் அனுப்பி உறுதி செய்து கொள்ள வேண்டி இருப்பதால் பணியில் விரைந்து கள வீரர்கள் தேர்வுக்காக கடமையாற்றிட வேண்டுகிறோம்!
இளைஞர்கள் தேர்வு தொடர்பாக ஒன்றிய வாரியான பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம் 21/06/2026 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. குத்தாலம் ஒன்றியம் காலை 10 மணி, மயிலாடுதுறை ஒன்றியம் காலை 11:30, செம்பனார்கோயில் ஒன்றியம் மாலை 4 மணி, கொள்ளிடம் ஒன்றியம் மாலை 5.30 மணி, சீர்காழி ஒன்றியம் மாலை 7 மணி, தோழர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்கவும்.
கடவாசல் குணசேகரன் மாவட்டத் தலைவர்,
கு.இளமாறன் மாவட்டச் செயலாளர்
மயிலாடுதுறை மாவட்டம்.
