பெரம்பலூரில் திராவிடர் எழுச்சி நாள்

1 Min Read

திராவிடர் கழகம்

பெரம்பலூர், ஜூன் 17- பெரம்பலூரில் 10.6.2026 அன்று மாலை 6 மணிக்கு திராவிடர் எழுச்சி நாள் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாளினை திராவிடர் கழகத்தின் சார்பில் பரப் புரைப் கூட்டம் நடை பெற்றது.
மாவட்டத் தலைவர் தங்கராசு தலைமை ஏற்க, மாவட்டச் செயலாளர் விஜ யேந்திரன் வரவேற்புரை ஆற்றிட, மாவட்ட காப்பாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், ஆலத்தூர் ஒன்றியச் செயலாளர் வேலாயுதம், பெரம்பலூர் நகரத் தலைவர் துரைசாமி, வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் மு.சர்புதீன், வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் புலவர் இராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பேச்சாளர் தி.என்னாரெசுபிராட்லா சிறப்புரை ஆற்றினார். திமுக மாவட்டச் செய லாளர் வீ. ஜெகதீசன், மாவட்ட திமுக மருத்து வரணி தலைவர் ச.த. ஜெயலட்சுமி கருத்துரை ஆற்றினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜெயராமன், மக்கள் அதிகார அமைப்பின் மாவட்டச் செயலாளர் காவேரி நாடன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இவ் விழாவிற்கு ஆத்தூர் முருகானந்தம், காட்டூர் கனகராஜ், வின்சென்ட், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துணைத்தலைவர் இரா. சின்னசாமி நன்றி கூற கூட்டம் இனிதே நிறை வுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *