கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற “திராவிடர் எழுச்சி நாள்” சிறப்புப் பொதுக்கூட்டம்

2 Min Read

கோவிலம்பாக்கம், ஜூன் 16– 8.6.2026 அன்று மாலை 6.30 மணிக்கு சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கோவிலம்பாக்கம், விடுதலை நகர், தந்தை பெரியார் நூலகம் அருகில் “திராவிடர் எழுச்சி நாள்” என முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்புக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு சோழிங்கநல் லூர் மாவட்டத் தலைவர்  வேலூர் பாண்டு தலைமை ஏற்று உரையாற்றினார். செயலாளர் க. தமிழினியன்  வரவேற்புரை ஆற்ற  மாவட்ட காப்பாளர்  ஆர்.டி.வீரபத்திரன் தொடக்க உரையாற்ற  கூட்டத்தை பொதுக்குழு உறுப்பினர் பி.சி.ஜெயராமன் ஒருங்கிணைத்தார்.

தமிழ்நாடு மூதறிஞர் குழுத் தலைவர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்,  மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.கலைச்செல்வன், மகளிர் அணித் தலைவர் தேவி சக்திவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலா ளர்  ஜெ.குமார், மாவட்ட வழக் குரைஞர் அணி அமைப்பாளர்  வே.பா.அறிவன், பெரியார் பற்றாளர் சரவணகுமார், கிண்டி பகுதி  திமுக 172ஆவது வட்ட துணைச் செயலாளர்  உ.திருவேங்கடம் ஆகியோர் சிற்றுரைக்குப் பிறகு இந்தக் கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு கொடுத்த முனைவர் ஏ.ரங்கநாதன் (கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்  கோவிலம்பாக்கம் திமுக கிளை கழகச் செயலாளர்) அவர்களின் 73ஆவது  பிறந்தநாள் மகிழ்வாக  மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கேடயம் வழங்கி பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தாம்பரம் மாவட்ட இளைஞரணித் தலைவர்  ரெ.சிவசாமி, ‘தடா’ ஒ.சுந்தரம் ஆகியோர் உரைக்குப் பிறகு  சிறப்பு பேச்சாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடர் கழகம்) கலைஞர் அவர்களின் சிறப்பு பற்றியும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் கலைஞரின் பிறந்த நாளை திராவிடர் எழுச்சி நாளாக கொண்டாடும் காரணத்தைப் பற்றியும் கலைஞரின் சிறப்புப் பண்புகளைப் பற்றியும்  தாய் கழகத்திற்கும் அவருக்கும் உள்ள உறவுகளைப் பற்றியும்  கலைஞரின் சாதனைகளைப் பற்றியும் மிகவும் சிறப்பாக உரையாற்றினார்.

இறுதியாக  மாவட்ட தொழி லாளர் அணித் அமைப்பாளர்  மணிகண்டன் நன்றி கூறினார்.

மகளிர் அணி தோழர்கள் ராதா பாண்டு, சுமதி மணி கண்டன், க.நன்னன், மண்ணிவாக்கம், ராஜா விடுதலை நகர், ஆதம்பாக்கம் நாராயணமூர்த்தி,  மேக்ஸ் வொர்த் நகர் சா.பாஸ்கர், கீழ்கட்டளை தமிழரசன், நவீனா. உள்ளிட்டோரும் ஏராளமான பொதுமக்களும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *