தமிழ்நாட்டில் அரசுக் கலைக் கல்லூரிகள் திறப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி வகுப்புகள் துவக்கம்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூன் 16- தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பருவகால (செமஸ்டர்) விடுமுறை முடிந்து ஜூன் 15 முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

வகுப்புகள் துவக்கம்: இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளின் 2-ஆம் மற்றும் 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று (15.6.2026) முதல் முறைப்படி தொடங்கியுள்ளன.

பருவகாலத் தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலாமாண்டு சேர்க்கை நிலவரம்: நடப்பு கல்வி ஆண்டிற்கான (2026-2027) இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு, கடந்த ஜூன் 4-ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த கலந்தாய்வு மற்றும் சேர்க்கை நடை முறைகள் அனைத்தும் முழுமையாக நிறை வடைந்த பிறகு, முதலாமாண்டு மாண வர்களுக்கான புதிய வகுப்புகள் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறக் கப்பட்டுள்ளதால், பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்களின் நடமாட்டம் அதி கரித்து, கல்வி வளா கங்கள் மீண்டும் களை கட்டியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *