சென்னை, ஜூன் 16- தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பருவகால (செமஸ்டர்) விடுமுறை முடிந்து ஜூன் 15 முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
வகுப்புகள் துவக்கம்: இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளின் 2-ஆம் மற்றும் 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று (15.6.2026) முதல் முறைப்படி தொடங்கியுள்ளன.
பருவகாலத் தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதலாமாண்டு சேர்க்கை நிலவரம்: நடப்பு கல்வி ஆண்டிற்கான (2026-2027) இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு, கடந்த ஜூன் 4-ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த கலந்தாய்வு மற்றும் சேர்க்கை நடை முறைகள் அனைத்தும் முழுமையாக நிறை வடைந்த பிறகு, முதலாமாண்டு மாண வர்களுக்கான புதிய வகுப்புகள் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறக் கப்பட்டுள்ளதால், பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்களின் நடமாட்டம் அதி கரித்து, கல்வி வளா கங்கள் மீண்டும் களை கட்டியுள்ளன.
