| உ |
லகக் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நடந்து கொண் டுள்ளன. நான்கு ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும் கால்பந்துப் போட் டிக்குத்தான் உலகில் இரசிகர்கள் அதிகம்.
இதில் வெட்கக் கேடு என்னவென்றால் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, இந்தப் போட்டியில் பங்கேற்கும் தகுதிச் சுற்றில் கூட அடி எடுத்து வைக்கும் தகுதியைப் பெறவில்லை என்பதுதான்.
பார்ப்பனர் கைகளில் சிக்கிக் கொண்ட கிரிக்கெட்(டு) தான் இங்கு உச்ச விளையாட்டு!
பிரிட்டிஷ் ஆட்சி விட்டுச் சென்ற மிச்ச – சொச்சம்தான் இது!
உலகக் கால்பந்து வரலாற்றில் “கடவுளின் கை” (Hand of God) என்ற சொல்லாடல் மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய ஒரு வரலாற்று நிகழ்வோடு தொடர்புடையது.
எந்தப் பித்தலாட்டத்துக்கும் துணை போகத்தான் ‘கடவுள்’ என்ற ஒன்றுதான் இருக்கவே இருக்கிறதே!
1986-ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் (Quarter-finals) இந்த நிகழ்வு அரங்கேறியது. ஜூன் 22, 1986 அன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
என்ன நடந்தது?
ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் 51-ஆவது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் டியாகோ மரடோனா (Diego Maradona) பந்தை இங்கிலாந்து அணியின் கோல் பகுதிக்குக் கடத்திச் சென்றார்.
இங்கிலாந்து வீரர் ஒருவர் பந்தைத் தடுக்க முயன்றபோது, பந்து காற்றில் உயரே எழும்பியது.
இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் பீட்டர்ஷில்டன் (Peter Shilton) பந்தைப் பிடிக்க முன்னோக்கி ஓடி வந்தார்.
கோல்கீப்பரை விட மரடோனா உயரம் குறைந்தவர் என்பதால், பந்தைத் தலையால் முட்டி அடிக்க முடியாது என்பதை உணர்ந்தார்.
இதனால் மரடோனா ரகசியமாகத் தனது இடது கையால் பந்தைத் தட்டி கோல் வலைக்குள் தள்ளினார்.
கால்பந்து விதிகளின்படி கையைப் பயன்படுத்தக்கூடாது. ஆனால், மரடோனா தலையால் முட்டித்தான் கோல் அடித்தார் என்று நடுவர் (Referee) அலி பென்னாசர் தவறாக நினைத்து, அதை ‘‘கோல்’’ என்று அறிவித்தார். இங்கிலாந்து வீரர்கள் எவ்வளவு வாதிட்டும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை.
”கடவுளின் கை” என்ற பெயர் வந்தது எப்படி?
இந்தச் சர்ச்சை கோல் அடித்த அடுத்த நான்கு நிமிடங்களில், மரடோனா வரலாற்றுப் புகழ்பெற்ற ‘‘நூற்றாண்டின் மற்றொரு சிறந்த கோலை” (Goal of the Century) அடித்தது அர்ஜென்டினாவை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தது.
அதைப் பற்றி பின்னர் கேட்கப்பட்டபோது, கிண்டலாக, ‘‘கொஞ்சம் மரடோனாவின் தலையும், கொஞ்சம் கடவுளின் கையும் சேர்ந்து அடித்த கோல் அது’’ என்றார் மரடோனா. இப்படித்தான் ‘கடவுளின் கை’ வந்தது.
எந்த ஒழுக்கக்கேட்டிற்கும் ‘கடவுள்’ துணை போவதை எண்ணிப் பார்க்க வேண்டும். ‘கடவுள்’ நம்பிக்கையாளர்கள் சிந்திப்பார்களாக!
‘கடவுள்’ துணை என்பது எல்லாம் இதுதான்!
