l சபரிமலைக் கோயிலில் நெய் விற்பனை முறைகேடு! 4 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.
>> திருப்பதி ஏழுமலையான், சபரிமலை அய்யப்பன் கோயில்களில் மோசடிகள் வரிசை கட்டி நின்றால் என்ன?
தீராத வினை எல்லாம் ‘தீர்த்து வைப்பான் கோவிந்தம்!’, ‘சாமியே அய்யப்பன் சரணம்!’ என்று கோஷம் போடும் பக்தர்களின் மூளையில், பகுத்தறிவு ரண சிகிச்சை நடக்காதவரை, கடவுள், கோயில் பக்தியின் பெயரால் பகற்கொள்ளையும், மோசடியும் நடக்கத்தான் செய்யும்! அரசியலில் ஊழல் என்று அண்டங்காக்கைகளாகக் கத்துவோர், கதறுவோர் கடவுள், கோயில், பக்தியின் பெயரால் மோசடிகளும், ஊழல்களும் நடந்தால், ‘‘கப்-சிப்’’தான்!
