அறந்தாங்கி – கீரமங்கலத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

அறந்தாங்கி, ஜூன் 12- அறந்தாங்கி கழக மாவட்டம் கீரமங்கலத்தில் 7.6.2026 அன்று, சுயமரி யாதைக்காரர் தலைவர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் விழா திராவிடர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் க. மாரிமுத்து தலைமையில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கறம்பக்குடி க.முத்துவும், மாவட்ட துணைத் தலைவர் குப்பகுடி இரா.இளங்கோவும் பொதுக்குழு உறுப்பினர் த.சவுந்தர்ராஜனும் முன்னிலை ஏற்றார்கள். வரவேற்புரை நிகழ்த் தினார், மாவட்ட துணைச் செயலாளர் ப.மகாராஜா.

நகர திமுக செயலா ளரும் கீரமங்கலம் பேரூ ராட்சித் தலைவருமான கே. சி. சிவகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர், முத்தமிழ் தமிழ் மாறன், மதிமுக நகரச் செயலாளர் வழக்குரைஞர் எஸ். பி. பிரபாகரன், தேமுதிக ஒன்றியச் செயலாளர், எஸ்.வி.பால்ராஜ் ஆகியோர் நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.

அறந்தாங்கி நகரத் தலைவர், வேலுச்சாமி பொதுக்குழு உறுப்பினர், அமுதா பகுத்தறிவாளர் கழகத் தோழர், ஆசிரியர் மாதவன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். தொடக்க உரையாற்றினார், கழக பேச்சாளர் சில்லத் தூர் சிற்றரசு.

கழகத்தின் பேச்சா ளரும் கிராமப்புற பிரச்சார மாநில அமைப் பாளருமான முனைவர் அதிரடி க. அன்பழகன் கலந்து கொண்டு சிறப்பாக உரையாற்றினார். தந்தை பெரியாரின் குருகுலத்து மாணவரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களின் 103ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவில் அவர் நிகழ்த்திய சாதனைகள், மாணவப் பருவம் தொட்டு போராடி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றியது வரை, அவர் ஆற்றிய பல்வேறு பணிகளை, இறந்த பின்னும் தனக்கான இடத்துக்காக போராடிப் பெற்றதை, சிறப்புகளை ஆதாரங்களோடு எடுத்துரைத்து உரையாற்றினார்.

தமிழர் தலைவர், ஆசிரியர் அவர் களுக்கு நன்றி கூறி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து விடை பெற்றார்.

நிகழ்ச்சிக்கு இணைப்பு உரையாற்றினார், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க. வீரையா. ஆசிரியர் மாதவன் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *