ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு 2026-2027 ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்!

1 Min Read

சென்னை,ஜூன் 10–- தமிழ்நாடு அரசுப் பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கான 2026-2027ஆம் கல்வியாண்டு பொது இடமாறுதல் கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களின் மாறுதல் விண்ணப் பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதளம் வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாறுதல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து வகை ஆசிரியர்களும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

முக்கிய தளர்வு: பொதுவாக மாறுதலுக்கு விதிக்கப்படும் “தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி நிறைவடைந்திருக்க வேண்டும்” என்ற நிபந்தனை இந்த முறை அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வின் போது பின்வரும் பிரிவினருக்கு முன்னுரிமை (Priority) வழங்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது:

பள்ளிக்கல்வித்துறையில் மாறுதல் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30ஆம் தேதி வெளியிடப்படும்.

கலந்தாய்வு ஜூலை 1 முதல் 24 வரை நடைபெறும். அதேபோல், தொடக்கக் கல்வித்துறையில் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 25ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 16ஆம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *