திருச்சியில் திராவிடர் எழுச்சி நாள்விழா, முத்தமிழறிஞர் கலைஞர் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

1 Min Read

தமிழ்நாடு

திருச்சி, ஜூன் 9- திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் எழுச்சிநாள் விழா, முத்தமிழறிஞர் கலைஞர் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம், ஜூன் 5 ஆம் தேதி  மாலை 6 மணியளவில் வரகனேரி, பிரான்சிஸ் படிப்பகம் அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஜெயில் பேட்டை மா.குணா வர வேற்புரையாற்றினார்.

மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், பொதுக்குழு உறுப்பினர் கள் கனகராஜ், சங்கிலி முத்து,  மாவட்டச் செயலா ளர் மகாமணி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜசேகர்,  மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பிரவீன், திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் அறிவுச்சுடர் திருவரங்கம் நகரத்தலைவர் கண்ணன்,  செயலாளர் முருகன், அண்ணாதுரை திருவரங்கம், திருநாவுக் கரசு, விடுதலை செல்வம், மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் வசந்தி,  ஜெயில் பேட்டை அமுதா, மாவட்ட மகளிரணித் தலைவர் ரெஜினா பால் ராஜ், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்சுடர்,  ராஜேந்திரன், பெல் ஆறுமுகம், மாநகர பக. தலைவர் குத்புதீன், மாவட்ட ப.க. தலைவர் மதிவாணன், மாநகர ப.க.செயலாளர் பென்னி  சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கழகப் பேச்சாளர் கோவை க.வீரமணி சிறப்பு ரையாற்றினார். நிறைவாக ஜெயில் பேட்டை பகுதி துணைத் தலைவர் சேவியர் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *