
திருச்சி, ஜூன் 9- திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் எழுச்சிநாள் விழா, முத்தமிழறிஞர் கலைஞர் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம், ஜூன் 5 ஆம் தேதி மாலை 6 மணியளவில் வரகனேரி, பிரான்சிஸ் படிப்பகம் அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஜெயில் பேட்டை மா.குணா வர வேற்புரையாற்றினார்.
மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், பொதுக்குழு உறுப்பினர் கள் கனகராஜ், சங்கிலி முத்து, மாவட்டச் செயலா ளர் மகாமணி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜசேகர், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பிரவீன், திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் அறிவுச்சுடர் திருவரங்கம் நகரத்தலைவர் கண்ணன், செயலாளர் முருகன், அண்ணாதுரை திருவரங்கம், திருநாவுக் கரசு, விடுதலை செல்வம், மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் வசந்தி, ஜெயில் பேட்டை அமுதா, மாவட்ட மகளிரணித் தலைவர் ரெஜினா பால் ராஜ், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்சுடர், ராஜேந்திரன், பெல் ஆறுமுகம், மாநகர பக. தலைவர் குத்புதீன், மாவட்ட ப.க. தலைவர் மதிவாணன், மாநகர ப.க.செயலாளர் பென்னி சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பேச்சாளர் கோவை க.வீரமணி சிறப்பு ரையாற்றினார். நிறைவாக ஜெயில் பேட்டை பகுதி துணைத் தலைவர் சேவியர் நன்றி கூறினார்.
