பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, ஜூன் 9– ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர்கள் தான் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பதவி உயர்வு, பணி நியமனம் என பல கோரிக்கைகள் அடங்கியுள்ளது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பணி விதிமுறைகள் என்பது ஏற்கெனவே வகுக்கப்பட்டு இருக்கின்றன. அதில் அவ்வப்போது மாற்றங்கள் செய்து அரசிதழ் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், ஆசிரியர்களுக்கான பணி விதிமுறைகளில் மாற்றம் செய்து பல்வேறு அறிவிப்புகள் அடங்கிய அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.. கடந்த ஜூன் 3ஆம் தேதியிட்ட அந்த அரசிதழில், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை எனவும்,
பள்ளிக்கல்வித்துறையில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் போது, 18 % தொடக்க கல்வித்துறையில் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியாக அரசாணைகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதித் தேர்வு கட்டாயம்
இந்த நிலையில், ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமா இல்லையா என குழுப்பபமான நிலை நீடித்த நிலையில், பள்ளி கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் விளக்கம் அளித்துள்ளார். ஆசிரியர்களின் பணி விதிமுறைகள் குறித்த அரசிதழில் குறிப்பிட்ட சில ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவை என நேரடியாக குறிப்பிடவில்லை .
அதே நேரத்தில், ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட சில ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் விளக்கம் அளித்துள்ளார்.
மே 29ஆம் தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் கிடைக்காத நிலையில், பணி விதிகள் அறிவிக்கப்பட்டன. எனினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, டெட் தேர்வு இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அஞ்சுமன் இஷாத்-இ-தாலீம் அறக்கட்டளை- மகாராட்டிர அரசு வழக்கில், 29 மே 2026 அன்று வழங்கப்பட்ட மறு ஆய்வுத் தீர்ப்பு, பதவி உயர்வுகளுக்கு TET பொருந்தும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
