அயோத்தி ராமன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பல கோடி ரூபாயை காணவில்லையாம்! அகிலேஷ் கண்டனம்

அயோத்தி ராமன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் பல கோடி ரூபாய் காணாமல் போன தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இது உறுதிப்படுத்தப் படாத தகவல் என்றும், தற்போது தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதா கவும் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மழுப்பலாக தெரிவித்துள்ளார். அதே போல உத்தரப்பிரதேச பாஜக அரசும் மவுனம் காத்து வருகிறது.

இதுதொடர்பாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்  கூறுகையில், ”ராமர் கோவிலில் நன்கொடை காணிக்கையாக பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது. இது கோயில் அறக் கட்டளைக்கு மிகவும் வெட்கக்கேடான நிலை. யாரும் எந்த விளக்கமும் அளிக்க முன்வரப் போவதில்லை. அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், அரசின் மவுனம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது” எனக் கண்டனம் தெரிவித்தார்.

சென்னை மின்வாரிய அலுவலகத்தில்

 தரவு சேமிப்பு சாதனங்கள் திருடப்பட்ட வழக்கு

 சிபிசிஅய்டிக்கு மாற்றம்

சென்னை, ஜூன் 9 சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ‘ஹாா்டு டிஸ்குகள்’ (தரவு சேமிப்பு சாதனங்கள்) திருடப்பட்ட வழக்கின் விசாரணை, சிபிசிஅய்டிக்கு மாற்றப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சில நாள்களுக்கு முன்பு அங்கிருந்த கணினிகளின் ‘ஹாா்டு டிஸ்குகள்‘ திருடப்பட்டன. இது தொடா்பாக மின்வாரிய அதிகாரி லலிதா, கடந்த 1-ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனா். இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்யும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவின்பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினா், இது தொடா்பாக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கணினி பராமரிப்பு பொறியாளராகப் பணியாற்றிய அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த கோபிநாத், கருநாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்த முரளி மனோகா் ஆகிய 2 பேரை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 34 ‘ஹாா்டு டிஸ்குகள்’ கணினியில் இயக்கத்துக்கு பயன்படுத்தப்படும் 20 ‘ராம்கள்’ ஆகியவை மீட்கப்பட்டன.

மேலும், இத்திருட்டின் பின்னணியில் இருப்பவா்களைக் கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினா் வலியுறுத்தினா். இந்நிலையில் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிசிஅய்டிக்கு மாற்றும்படி காவல் ஆணையா் அமல்ராஜ், தமிழ்நாடு காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வாலுக்கு பரிந்துரைத்தாா்.

அந்த பரிந்துரையின் அடிப்படையில், இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஅய்டிக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் நேற்று (8.6.2026) உத்தரவிட்டாா். இதையடுத்து, சிபிசிஅய்டி அதிகாரிகள், வழக்குத் தொடா்பான விசாரணையை உடனடியாகத் தொடங்கினா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *