கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.6.2026

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* எந்த கேள்வியும் கேட்காமல் இளைஞர்கள் பக்கோடா விற்க பிரதமர் மோடி விரும்புகிறார்: ராகுல் காந்தி தாக்கு.

* இளைஞர்களின் கோபத்தைத் தணிக்க மோடி அரசு முயற்சி செய்திட வேண்டும்;இல்லையெனில் கரப்பான்களின் போராட்டம் அதிகரிக்கும் என்கிறது தலையங்கம்.

டெக்கான் கிரானிக்கல், ஹைதராபாத்:

* வீட்டு சமையல் எரிவாயு தொடர்ந்து விலை ஏற்றம்; இது தான்  நீங்கள் கூறிய ‘நல்ல காலமா’? பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* டெல்லிப் போராட்டம் வெறும் டிரைலர் ஒன்றிய கல்வி அமைச்சர் 7 நாளில் பதவி விலக வேண்டும்: கரப்பான் பூச்சி கட்சி நிறுவநர் கெடு

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கூட்டணி ஒற்றுமையாக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ள நிலையில், ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் ‘ஜன்பந்தன்’ கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கவுள்ளன

தி இந்து:

* “மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடு தான் இந்த ஆட்சி…” – என்று சென்னையில் நடந்த திமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிகே) சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபுவை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

* நீட் வினாத்தாள் கசிவு, ஓஎஸ்எம் விவகாரம்: என்டிஏ, சிபிஎஸ்இ பதிலளிக்க நாடாளுமன்றக் குழு உத்தரவு

தி டெலிகிராப்:

*வாரணாசிக்குள் இனி இறைச்சி, மீன் கடைகளுக்கு தடை: நகருக்கு வெளியே இடமாற்றம் செய்ய மாநகராட்சி தீர்மானம். தற்போது நகரின் எல்லைக்குள் சுமார் 350 முதல் 400 இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘விஷ்வகுருவால் சொந்த குடிமக்களை விலை அதிர்ச்சியில் இருந்து காக்க முடியாது’: உள்நாட்டு எல்பிஜி விலை உயர்வு குறித்து ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *