2 நாட்களாக இருளில் மூழ்கிய குமரி – திருவள்ளுவர் சிலை! மின் கேபிள் பழுதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!!

1 Min Read

கன்னியாகுமரி, ஜூன் 6 கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மின்சாரம் கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கேபிள் சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்த நிலையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் கேபிளில் ஏற்பட்ட பழுதால் திருவள்ளுவர் சிலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சிலை முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

மேலும், கண்ணாடி பாலத்தில் நாள்தோறும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிரும் அலங்கார மின் விளக்குகளும் கடந்த இரண்டு நாட்களாக எரியாமல் உள்ளன. இதனால் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

திருவள்ளுவர் சிலைக்கு மின்சாரம் வழங்கும் கேபிளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *