மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
நாட்டைப் பிடித்த அய்ந்து நோய் களில் பத்திரிகையும் ஒன்று (பார்ப்பான், பத்திரிக்கை, சட்டசபை, தேர்தல், சினிமா) என்றார் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் .
பத்திரிக்கைகள் என்பது உலகச் செய்திகளை உடனுக்குடன் தருவது மட்டுமின்றி, மக்களின் அறிவு வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் வகையில் இருப்பது தான் பத்திரிகையின் சிறப்பு, இவை இல்லாமல், மக்களை மாக்களாக செய்யும் நிலையை உணர்ந்து தான், தந்தை பெரியார் அவர்கள் மனிதனைப் பிடித்த நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்றார்.
பகுத்தறிவுப் பகலவன் அய்யா அவர்கள் எதைச் சொன்னாலும் ஆணித் தரமாக, உண்மையாக, ஏற்றுக் கொள்ளும் படியாகத் தான் இருக்கும்.
பத்திரிக்கைகள் வியாபார நோக்க மின்றி செயல் படவேண்டும்.
ஆனால் அறிவை மழுங்கடிக்க செய்யும் வேலையை தான் இன்று பெரும் பாலான பத்திரிக்கைகள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களின் அறிவை பாதிக்கும் செய்திகள், ராசி பலன்கள், சினிமா செய்திகள் என்று அனைத்து மக்களின் அறிவையும் அழிக்கும் வேலையை தான் இன்றைய பத்திரிக்கைகள் செய்து வருகின்றன.
ஆனால் இவற்றிற்கு மாறாக பகுத் தறிவுக் கருத்துகள், சிந்தனை ஓட்டங்கள், அய்யங்களிலிருந்து தெளிவு பெறுதல், வினாவும் விடையும் அறிந்து கொள்ளும் வகையில், முக்கியமாக ராசி பலன், சினிமா செய்திகள் இல்லாமல் வெளிவரும் ஒரே நாளிதழ் ‘விடுதலை’ மட்டும் தான்.
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் தான்,
சிந்தையும், நன்மையும் தான் பத்திரிகைக்கு அழகு என்ற வகையில் ‘விடுதலை’ நாளிதழை இனத்தின் வழிகாட்டும் ஒளி யாக விட்டுச் சென்றார்.
நீடு துயில் நீக்க பாடிவந்த நிலா என்பதைப்போல
சமூகத்தின் கெடுதலை ஒழிக்க வந்தது தான் ‘விடுதலை’ நாளிதழ்.
சமுதாயத்தின் முடைநாற்றங்களை ஒழிக்க, பகுத்தறிவு சிந்தனைகளை நாள் தோறும் ஓய்வின்றி வளர்த்து வரும் ஆக்கப் பணிகளை தான் ‘விடுதலை ‘ நாளேடு செய்து வருகின்றது.
‘விடுதலை ‘ நாளேட்டுக்கு மானமிகு ஆசிரியர் அவர்களை பொறுப்பில் அமர்த்தி மகிழ்ந்தார் அய்யா அவர்கள் .
நாட்டு மக்கள் அந்நியர்கள் பிடியில் இருந்து விடுதலை பெற்று மகிழ்ந்த வேளையில்,
மக்கள் அனைவரும் பகுத்தறிவு பரப்பும் ஒரே ஏடான ‘விடுதலை ‘ யின் பயனை அறியும் படி செய்தார் தந்தை பெரியார் அவர்கள்.
உலகிலேயே அதிக ஆண்டுகள் ‘விடுதலை ‘ நாளிதழின் ஆசிரியராக
மானமிகு ஆசிரியர் அவர்கள் இருப்பது சிறப்பிலும் சிறப்பு.
மானமிகு ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள் கூறியதைக் போல ,பொன்னாடை, நூல்களுக்கு பதிலாக ‘விடுதலை’ சந்தா அளிக்க வேண்டும் என்பது, இனத்தின் மானத்தை அழிப்பதை தடுக்க நாம் தான் முயலவேண்டும், இனம், பகுத்தறிவுக்கு ஒவ்வாத,மூடப் பழக்கங்கள் இவற்றிற்கு எதிராக முதலில் குரல் கொடுப்பது ‘விடுதலை’ நாளிதழ் மட்டும் தான்.
அப்படி சிறப்பு பெற்ற ‘விடுதலை’ க்கு சந்தா வழங்க வேண்டும்.
இது வெறும் நிதி அல்ல, இந்த சமூகத்தின் நீதிகளை காப்பாற்ற, வலுப்படுத்த செய்ய பெரும் பணி தான் ‘விடுதலை’ சந்தா என்பது, அதைத் தான் மானமிகு ஆசிரியர் அவர்கள் சொல்லி இருக்கிறார்.
தமிழர்கள் இல்லம் என்பதற்கு அடை யாளம் ‘விடுதலை’ நாளிதழ் இருப்பது தான் என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.
உள்ளங்கள் தோறும் பரவட்டும், இல் லங்கள் தோறும் தவழட்டும் ‘விடுதலை’ நாளிதழ்.
கழகத்தின் தோழர்கள் அனைவரும் மானமிகு ஆசிரியர் அவர்களின் கருத் திற்கு வலு சேர்ப்போம்.
‘விடுதலை’ என்பது வெறும் ஏடு அல்ல, மானங்களை மீட்கும், காக்கும் கேடயம்.
VIDUTHALAI
V : Voice
I : Intelligent
D : Day
U : Useful
T : Think
- : Honest
- : Aim
- : Like
- : Any
I : Immediately
திராவிடத்தின் குரலாக, பகுத்தறிவின் ஒளியாக நாளும் தொடரும் ‘விடுதலை’க்கு 92ஆம் அகவையில் நாம் பெருமை சேர்க்க, உரிமையாக கடமையை நிறை வேற்றுவோம்.
மானமிகு ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களின் கருத்தை உயர்த்துவோம்.
தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை நாளும் வலுப்படுத்த ‘விடுதலை’ யால் தான் முடியும்.
நம்மால் முடியாதது யாரால் முடியும் என்ற மானமிகு ஆசிரியர் அவர்கள் கருத்துக்கு மேலும் உயிர் கொடுப்போம்.
அன்புள்ள வாசகன்,
கழகத் தொண்டன்,
– மு.சு. அன்புமணி,
16/13 முத்து தெரு, மதிச்சியம், காந்தி நகர் அஞ்சல், மதுரை 625020
கைபேசி எண் : 9688021647
