டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* இன்னும் ஓராண்டில் பிரதமராக மோடி இருக்க மாட்டார்: ராகுல் காந்தி கணிப்பு. மக்களின் அழுத்தம் காரணமாக அரசு நிர்வாக அமைப்பிற்குள் கிளர்ச்சி வெடித்திருக்கிறது. இந்த நிலை நீடித்தால் என் கணிப்புப்படி, இன்னும் ஓராண்டு காலத்தில் மோடி பிரதமராக இருக்க மாட்டார் என ராகுல் காந்தி கணிப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மம்தா எதிர்ப்பாளருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு.
* தமிழ்நாட்டில் அதிமுக சண்முகம் பதவி விலகியதால், காலியாக உள்ள மாநிலங்களவை தொகுதியை, காங்கிரசுக்கு ஒதுக்கியது தவெக.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பத்திரிகையாளர், அரசியல் ஆய்வாளர் உள்பட கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தி தொடர்பாளர்கள் நியமனம். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டில்லியில் போராட்டம்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கருநாடக முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு; துணை முதலமைச்சரானார் ஜி.பரமேஸ்வர்: சித்தராமையா மகன் உள்பட 12 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
* ஒடிசாவில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான புதிய இட ஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தது. திருத்தப்பட்ட இந்தக் கொள்கையின் கீழ், தொழிற்கல்வி படிப்புகளில் பழங்குடியின மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 12 சதவீதத்திலிருந்து 22.5 சதவீதமாகவும், பட்டியல் இன மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 8 சதவீதத்திலிருந்து 16.25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
* டி.கே. சிவக்குமாருக்கு பதிலாக பி.கே. ஹரிபிரசாத், கருநாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமனம். ஹரிபிரசாத் வரவிருக்கும் சட்ட மேலவை தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளராகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, இந்தப் புதிய நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தி இந்து:
* மம்தாவுக்கு ஆதரவாகத் திரண்ட விசுவாசிகள்: கட்சியிலிருந்து நீக்கப்பட்டத் தலைவர் சட்டப் பேரவையில் திரிணாமுலை வழிநடத்த முடியாது என வலியுறுத்தல்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘நாட்டின் தங்கம் விற்கப்படுகிறதா?’: ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி குறித்து ஒன்றிய அரசிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி. அந்நியச் செலாவணிக்காக ரூ.1.15 லட்சம் கோடி தங்கத்தை விற்றதா ரிசர்வ் வங்கி?: புளூம்பெர்க் குற்றச்சாட்டால் பரபரப்பு.
– குடந்தை கருணா
