ருத்ரா எம்-2 ஏவுகணை சோதனை வெற்றி

1 Min Read

புதுடில்லி, ஜூன் 4 வானிலிருந்து தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்வாய்ந்த ருத்ரா எம்-2 ஏவுகணை, எதிரி நாடுகளின் ரேடியோ அலைவரிசை மற்றும் ரேடார் சிக்னல்களை 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே கண்டறியும் திறன் கொண்டது. ருத்ரா எம்-2 ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

சுகோய் போர் விமானத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் முடிவில், ‘ருத்ரா’ எம்-2 ஏவுகணை தனது இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானத்திலிருந்து தரைப்பகுதி, கடற்பரப்பில் உள்ள எதிரிகளின் ரேடார்கள், தகவல் தொடர்புத் தளவாடங்களை தொலைவிலிருந்தே கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *