பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக ஆட்டோ ஓட்டுநராக மாறிய அய்.டி. நிறுவன பெண் அதிகாரி “கவுரவத்தைவிட மன அமைதியே முக்கியம் என்கிறார்”

1 Min Read

பெங்களூரு, ஜூன் 2-– பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப (அய்டி) நிறுவன பெண் மேலாளர் ஒருவர், தற்போது ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பெண் தொழிலதிபர் நெஸ்ரின் மித்லாஜ். அய்க்கிய அரபு அமீரகத்தின் துபாயை மய்யமாகக் கொண்டு அவர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அண்மையில் கருநாடக தலைநகர் பெங்களூருவுக்கு சென்ற அவர் ஒரு ஆட்டோவில் பயணம் செய்தார். ஆட்டோவை ஓட்டிய இளம்பெண்ணின் நடை, உடை பாவனை, தெளிவான ஆங்கில உச்சரிப்பை பார்த்து வியந்த தொழிலதிபர் மித்லாஜ், அந்த பெண்ணை குறித்து விசாரித்தார்.

அப்போது பெங்களூருவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சுமார் 9 ஆண்டுகள் அந்த பெண் மேலாளராகப் பணியாற்றி இருப்பதை அறிந்து ஆச்சரியத்தில் உறைந்தார். அய்டி துறையின் பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக மேலாளர் பதவியை விட்டு விலகிய அந்த பெண், தற்போது சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இதுகுறித்து தொழிலதிபர் நெஸ்ரின் மித்லாஜ் சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநரை சந்தித்தேன். அழகான சீருடையில் இருந்த அவர் தன்னம்பிக்கை, மன நிறைவோடு வாழ்கிறார். பொதுவாக ஆண்களே ஆட்டோ ஓட்டுநர்களாக பணியாற்றுவார்கள். இந்த துறையில் நீங்கள் நுழைந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினேன்.அதற்கு அந்த பெண் அளித்த பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“9 ஆண்டுகள் அய்டி நிறுவனத் தில் மேலாளராகப் பணியாற்றினேன். அழுத்தம், மனஉளைச்சல், பதற்ற மான மனநிலை காரணமாக அந்தப் பணியை துறந்துவிட்டேன்’’ என்று பெண் ஆட்டோ ஓட்டுநர் கூறினார்.

தற்போது அவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டுகிறார். மாதம் சுமார் ரூ.60,000 ஊதியம் ஈட்டுகிறார். இந்த பணியில் அவர் மகிழ்ச்சியாக வாழ்கிறார். கவுரவத்தைவிட மன அமைதியே முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *