வாட்டி வதைக்கும் வெயில்… சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டிய விசயங்கள்!

வெயில் காலத்தில் மற்றவர்களை விட சர்க்கரை மருத்துவப் பயனாளிகள் அதிக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வெயில் காலத்தில் சர்க்கரை மருத்துவப் பயனாளிகள் பின்பற்ற வேண்டியவை:

கோடை காலத்தில் மற்றவர்களை காட்டிலும் சர்க்கரை மருத்துவப் பயனாளிகளுக்கு நீரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதால் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

நீர் சத்து மற்றும் நார் சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். (எ.கா) வெள்ளரிக்காய், முள்ளங்கி, ஆரஞ்சு, ஆப்பிள், தர்பூசணி, கிர்ணிபழம், மாதுளம்பழம்.

வெயில் காலத்தில் இன்சுலின் உணர்திறன் குறைவதால் இது சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. அதனால் அவ்வப்போது ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக வெயிலில் செல்வதை தவிர்ப்பது நல்லது. வெயிலில் கண்டிப்பாக செல்ல நேர்ந்தால் முகம் மற்றும் தோலில் சன்ஸ்கிரீன் தடவி கொண்டும், பருத்தி மற்றும் காற்றோட்டம் உள்ள ஆடைகள் அணிந்தும், குடை நிழலிலும் செல்வது நல்லது.

இன்சுலின் மற்றும் மருந்துகளின் செயல் திறனை வெப்பம் குறைக்கக் கூடியதால் வெப்பத்திலிருந்து இவற்றை விலக்கி, குளிர்ந்த அல்லது உலர்ந்த இடத்தில் அதனை வைக்கலாம்.

உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி விடியற்காலை நேரத்தில் அல்லது (இண்டோர்) வீட்டிற்கு உள்ளே செய்வது நல்லது. வெயில் நேரத்தில் நடை பயிற்சி செய்வது தோல் சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.

தவிர்க்கவேண்டிய விசயங்கள்!

மது அருந்துதல் கூடாது. ஏனெனில் மதுவில் டையூரிடிக் பண்புகள் ( நீரை வெளியேற்றுவது) இருப்பதால் நீரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

எனர்ஜி பானங்கள், பழச்சாறுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

வெப்பமான சூழ்நிலையில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இது வியர்வை மற்றும் இதயத்துடிப்பை அதிகப்படுத்தும்.

தலைவலி, மயக்கம், தசைபிடிப்பு, வாந்தி போன்ற அறிகுறிகளை உதாசீனப்படுத்தவேண்டாம். அவை வெப்ப சோர்வின் தொடக்கமாக இருக்கலாம்

எந்த காரணம் கொண்டும் காலணிகள் இல்லாமல் வெளியே செல்லக்கூடாது. முடிந்தால் வீட்டுக்குள்ளேயும் காலணிகள் அணிவது நல்லது.

எண்ணெயில் பொரித்த மற்றும் காரமான உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *