பிரதமர் மோடியின் புதிய இந்தியா வில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பா.ஜ,வின் பிரதான இலக்காக மாறியுள்ளனர்.கிரிமினல் பின்னணி கொண்ட பா.ஜ., தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க் கப்படுகின்றனர்.ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினால் தகுதி நீக்கம் செய்கின்றனர். இன்று, நமது அரச மைப்பு ஜனநாயகத்தின் வீழ்ச்சியை கண்டுள்ளோம் என கூறி உள்ளார்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய் யப்பட்டது, சங்பரிவார் அமைப்புகள் ஜனநாயகத்தின் மீது தொடுத்த வன் முறை தாக்குதல் என்று கூறியுள்ளார்.
டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்
நாட்டில் ஒரே ஒரு கட்சியும் ஒரே ஒரு தலைவரும் தான் இருக்க வேண்டும் என்ற சூழலை அவர்கள் (பாஜக) உருவாக்குகிறார்கள். பிற அனைத்துக் கட்சிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதைத்தான் சர்வாதிகாரம் என்கி றோம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை விட மோசமான அரசாங்கமாக மோடி யின் அரசு உள்ளது
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
ராகுல் தகுதி நீக்கத்தை எதிர்த்து சட்ட, அரசியல் ரீதியாக போராடு வோம். எங்களின் குரலை நசுக்க முடி யாது. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.பார்லி., கூட்டுக்குழு விசா ரணை மற்றும் பிரதமர் மோடிக்கும் அதானிக்குமான தொடர்பு போன்ற வற்றை மறைக்க ராகுகல் தகுதி நீக்கப் பட்டுள்ளார். இது இந்திய ஜனநாய கத்தின் மீதான தாக்குதல் என கூறி உள்ளார்.
மராட்டிய மேனாள் முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே
ராகுலின் வேட்புமனு ரத்து செய்யப் பட்டது. திருடன், திருடன் என்று அழைப்பது நம் நாட்டில் குற்றமாகி விட்டது.திருடர்களும் கொள்ளையர் களும் இன்னும் சுதந்திரமாக இருக் கிறார்கள். ராகுல் தண்டிக்கப்பட்டு உள்ளார்.இது ஜனநாயகத்தை கொலை செய்துள்ளனர்.இது சர்வாதிகாரத்தை முடிவு கட்டுவதற்கான துவக்கம். எதிர்த்து போராடுவது மட்டுமே நல்ல முடிவை கொடுக்கும் என கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் மக்களின் பேராதரவைப் பெற்ற ராகுல் காந்தியின் அரசியல் செயல் பாடுகளை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்காலிக மாக பதவி பறிப்பை செய்திருக்கிறார்கள். ராகுல் காந்தியின் பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே அறிவிக்க இருக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் முழு அளவில் பங்கேற்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
ராகுல் காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. நாட்டு மக்கள் இதற்கெல்லாம் சேர்த்து பாஜக அர சுக்கு தண்டனை கொடுப்பார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
இது சர்வாதிகார அடக்குமுறையின் அறிவிப்பாகும். நாட்டை அறிவிக்கப் படாத அவசரநிலை நெருக்கடிக்குள் நெட்டித் தள்ளி வரும் ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயகப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. இத்தகைய ஜனநாயக விரோத, அராஜக, அச்சுறுத்தல் நட வடிக்கைகளை அனுமதிக்க இயலாது. இதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவான குரல் எழுப்ப வேண்டும்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி
ஜனநாயகத்தின் கோட்பாடுகளை அவமதிக்கும் சக்திகளுக்கு எதிராக எங்களது குரல் தொடர்ந்து வலுவாக ஒலிக்கும். நாங்கள் ராகுலுடன் இருக்கி றோம் என்றார்.
இதேபோல் சட்டப்பேரவை காங் கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான், மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.