கீழடி ஆய்வு: உண்மை வரலாற்றை மறைக்காமல் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட வேண்டும் ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

1 Min Read

சென்னை, மே 28 தமிழர்களின் உண்மை வரலாற்றை மறைக்க முயற்சிக் காமல், அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று (27.5.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கை தமிழர் நாகரீகம் வரலாற்றில் மிகவும் தொன்மையானது என்பதை அறிவியல் பூர்வமாக, சான்றுகளோடு உறுதிப்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே உள்ள கீழடியை ஆய்வு செய்து பல்வேறு அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் அந்த அறிக்கை 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மிக நீண்ட உழைப்பின் பலனாக 982 பக்கம் கொண்டதாக அந்த அறிக்கை வெளியானது. வேதகால நாகரிகத்திற்கு முன்பே தமிழர் நாகரிகம் தோன்றியது என்பதை அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை உறுதி செய்கிறது.

இந்த அறிக்கை வெளி வந்தால் ஒன்றிய பாஜ அரசின் அறிவியலுக்குப் புறம்பான, பிற்போக்கான புராண இதிகாச கருத்தியல் தவறானது என உறுதி செய்து விடும். எனவே, அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக் கையை திருத்தம் செய்யுமாறு ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. உண்மை வரலாற்றை மறைக்க முயற்சிக்காமல், அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை ஒன்றிய பாஜ அரசு உடனடியாக வெளி யிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *