சென்னை, மே 28 கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனைகளுக்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
கனிமவள வழக்கு
கொச்சின் கனிமவள முறைகேடு வழக்கு தொடர்பாக, கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் இல்லங்கள் உட்பட மொத்தம் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பினராயி விஜயனின் மகள் வீணா நடத்தி வரும் ‘எக்ஸாலாஜிக்’ என்ற நிறுவனத்திற்கும், ‘கொச்சின் மினரல்ஸ்’ மற்றும் ‘ரூடில்’ நிறுவனத்திற்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் , இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்தச் சம்பவம் கேரள அரசியலில் பெரும் ப்ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்த சோதனை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர் பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் இந்த சோதனை நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்
பினராயி விஜயன் ஏன் இது வரை பாஜகவால் குறிவைக்கப் படவில்லை?’ எனப் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த காங்கிரஸ் தலைவர்களின் கூற்றுகள் முற்றிலும் பொருளற்றவை என்பதை இந்த ரெய்டுகள் தற்போது அம்பலப்படுத்தியுள்ளன.”
பாஜக அரசு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கில் மத்திய முகமைகளைத் தவறாகப் பயன் படுத்துகிறது, என்பதைச் சுட்டிக் காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், இத்தருணத்தில் பினராயி விஜ யனுக்குத் தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
