3 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது சீனாவின் ‘ஷென்சோ-23’ விண்கலம்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெய்ஜிங், மே 27- சீனா தனது தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களு டன் ஷென்சோ-23 விண்கலத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு வெற்றிக ரமாக விண்ணில் ஏவியது.

வரும் 2030-க்குள் நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் சீனாவின் திட்டத்துக்கு முன்னோட் டமாக இந்த விண்வெளிப் பயணம் கருதப்படுகிறது.

இப்பயணக் குழுவின் தளபதியாக சூ யாங்ஜு செயல்படுகிறாா். இவருடன் ஜாங் ஜியுவான், ஹாங்காங்கில் பிறந்து வளா்ந்த லாய் கா-யிங் ஆகியோரும் இணைந்து பயணித்துள்ளனா். இதன்மூலம், ஹாங்காங் பகுதியிலிருந்து விண்வெ ளிக்குச் செல்லும் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெரு மையை லாய் கா-யிங் பெற்றுள்ளாா்.

தியாங்காங் விண்வெளி நிலையத்தில் ஏற்கெனவே 200 நாள்களுக்கும் மேலாக தங்கியிருக்கும் ‘ஷென்சோ-21’ குழுவினருக்குப் பதிலாக இப்புதிய குழுவினா் அங்கு பொறுப்பேற்கவுள்ளனா். விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் காலத் தில், இவா்கள் பல ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளத் திட்ட மிட்டுள்ளனா்.

இப்பயணத்தின் சிறப்பம்சமாக, 3 வீரா்களில் ஒருவா் விண் வெளி நிலையத்தில் முழுமையாக ஓராண்டு காலம் தங்கி சாதனை படைக்க உள்ளாா். நீண்ட கால விண்வெளிச் சூழலில் மனித உடலின் தகவமைப்பு மற்றும் செயல்திறன் எல்லைகளை ஆராய்வதே இதன் நோக்கமாகும். இது உலக அளவில் விண்வெளியில் மனிதன் மிக நீண்ட காலம் தங்கியிருந்த தனிநபா் சாதனைகளில் ஒன்றாக அமையும்.

அமெரிக்காவால் பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து சீனா விலக்கி வைக்கப் பட்டதைத் தொடா்ந்து, தியாங்காங் எனும் சொந்த விண்வெளி நிலையத்தை சீனா அமைத்தது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *