பெரம்பலூர், மே. 26- மனிதனாகப் பிறந்து இறைவனை எண்ணி மனிதர்களுக்காக வாழ்ந் தவர் அம்பேத்கர் என்று திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி. பெரம்பலூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் புகழாரம் சூட்டினார்.
பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த பெரியாரிய சிந்தனை உடைய துரைசாமி என்பவர் எழுதிய பாபாசாகேப் புரட்சியாளர் டாக்டர் “அம்பேத்கர் சிலை அல்ல எரிமலை” என்ற புத்தக வெளியீட்டு விழா பெரம்பலூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
விழாவில் து.பாலமுருகன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து விழாவில் திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி, சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், மனிதனாகப் பிறந்து உயர்ந்த தவத்தால், ஒழுக்கத்தால் இறைவனையே எண்ணி வாழ்ந்து இறைவனோடு சேர்ந்து மனித சமுதாயம் உயர்வதற்காக, தான் பயின்ற கல்வியை பயன்படுத்தி மனிதர்களுக்காக பாடுபட்டவர் அம்பேத்கர் என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் தியாகத்தை எடுத்துரைத்தார்..
பின்னர் நூலினை பெற்று வாழ்த்துரை வழங்கியவர்கள்;
மாவட்டக் கழகக் காப்பாளர் ந.ஆறுமுகம், மாவட்ட தலைவர் சி.தங்கராசு, திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ .ஜெகதீசன், திமுக பொறியாளர் அணி துணை செயலாளர் ப.பரமேஷ் குமார், நகர செயலாளர் ம.பிரபாகரன், விசிக மண்டல செயலாளர் இரா.ஸ்டாலின், இந்தோ அறக்கட்டளை ரெ.செல்வகுமார், தலைமையாசிரியர் சபா.சிலம்பரசன்,
மாவட்டக் கழகச் செயலாளர் மு.விஜயேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் இரா.சின்னசாமி, பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட தலைவர் பெ.நடராசன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் அரங்க வேலாயுதம் உள்ளிட்ட திமுக மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
